India
“ஒரே நாளில் நாயகனான யாசகர்..” : தூற்றிய கிராமத்தினர் தலையில் தூக்கி கொண்டாட காரணம் என்ன?
ஆந்திர மாநிலத்தில் உள்ள நீதி கிராமத்தைச் சேர்ந்த கேதாரேஸ்வர் ராவ் (55) என்பவர் கடந்த 1998 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஆனால் அந்த ஆண்டு நீதிமன்ற உத்தரவு காரணமாக தேர்வானவர்கள் யாருக்கும் அரசு பள்ளி ஆசிரியர் வேலை கிடைக்கவில்லை.
இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்ற நிலையில் கேதாரேஸ்வர் ராவ் ஏழ்மை காரணமாக சைக்கிளில் ஊர் ஊராக சென்று துணிகளை விற்க தொடங்கியுள்ளார். சில நாட்களில் இவரின் பெற்றோரும் இறந்து விட்டனர். இவரிடம் இவர் வாழ்ந்த பழைய வீட்டை தவிர வீறு ஏதும் இல்லை.
இந்த மோசமான நிலையிலும் ஒரு நாள் ஆசிரியராவேன் என்ற உறுதியுடன் வாழ்ந்து வந்துள்ளார். சில நேரம் இவர் விற்கும் துணியை யாரும் வாங்காத நேரம் யாசகம் பெற்று உயிர் வாழ்ந்துள்ளார்.
இந்நிலையில், 1998ஆம் ஆண்டு அரசு ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் அனைவருக்கும் பணி நியமனம் வழங்குமாறு சமீபத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் காரணமாக, கேதாரேஸ்வர் ராவ்விற்கு அரசு ஆசிரியர் பணி கிடைத்துள்ளது.
பணம் வந்தால் கண்டுகொள்ளாத உறவுகள் கூட கண்டுகொள்வதைப்போல இவர் கஷ்டப்பட்ட காலத்தில் இவரை கண்டுகொள்ளாத கிராம மக்கள் இப்போது இவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். இவரின் பெயரும் தற்போது சற்று வாட்டார பகுதிகளில் பரவி வருகிறது.
Also Read
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!