India
“600க்கு 597 மதிப்பெண்.. மாநிலத்தில் 2ம் இடம்” : ஹிஜாப் பிரச்சனைக்கு மத்தியிலும் சாதித்த இஸ்லாமிய மாணவி!
கர்நாடகா மாநிலத்தில் பி.யு.சி., இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் 22ல் துவங்கி மே 18 வரை நடைபெற்றது. சுமார் 1,076 மையங்களில் நடந்த இந்த தேர்வில் மொத்தம், 6 லட்சத்து 84 ஆயிரத்து 255 மாணவ - மாணவியர் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர்.
ஹிஜாப் பிரச்சனை உள்ளிட்ட முக்கிய காரணங்களினால், தினமும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்வு எழுத வரவில்லை. விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிந்து, மதிப்பெண் சரிபார்ப்பு பணியும் முடிந்து விட்டது.
இந்நிலையில், பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள பி.யு., போர்டு அலுவலகத்தில் கடந்த 17ம் தேதி காலை 11:00 மணிக்கு, தொடக்க கல்வி துறை அமைச்சர் நாகேஷ், தேர்வு முடிவுகளை வெளியிட்டார். அந்த முடிவில், மாணவிகள் 68.72%, மாணவர்கள் 55.22% தேர்ச்சி பெற்றிருந்திருந்தனர். துணைத் தேர்வு தேதி இம்மாத இறுதியில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹிஜாப் பிரச்சனையிலும் கல்வியில் கவனம் எழுத்தி தேர்வு எழுதிய இஸ்லாமிய மாணவி இல்ஹாம் 600க்கும் 597 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் 2ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இஸ்லாமிய மாணவிக்கு அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
மங்களூருவில் உள்ள செயின்ட் அலோசியஸ் பள்ளி மாணவியான இல்ஹாம், 600க்கு 597 மதிப்பெண்கள் பெற்று, மருத்துவ துறையில் பணியைத் தொடர விரும்பியதால் இதனை சாதித்துள்ளார்.
இதுகுறித்து மாணவி இல்ஹாம் கூறுகையில், “இது கடினமான நேரம். இருப்பினும், எனது நோக்கம் தெளிவாக இருந்தது, எனது கவனம் படிப்பில் இருந்தது. என்னைப் போல பல மாணவிகள் தேர்வு எழுதியிருந்தால் நல்ல மதிப்பெண் பெற்றிருக்கமுடியும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!