India
மூச்சுக் குழாயில் பூஞ்சை.. எப்படி இருக்கிறார் சோனியா காந்தி? - மருத்துவர்கள் சொல்வது என்ன ?
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். முதலில் வீட்டில் தனிமையில் இருந்த அவர், உடல்நிலை மோசமானதால் டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சோனியா காந்தி உடல்நிலை குறித்து காங்கிரஸ் கட்சி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்ததாவது,
”கொரோனா பாதிப்பால் ஜூன் 12-ம் தேதி சோனியாவுக்கு மூக்கில் இருந்து அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சோனியா காந்திக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சோனியா காந்தியின் சுவாச மண்டலத்தில் பூஞ்சை தொற்று பாதித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை தரப்படுகிறது. மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சோனியா காந்திக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்று குறிப்பிட்டிருந்தது.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்