India
“ஒரே ஆண்டில் இடம்பெயர்ந்த 50 லட்சம் இந்தியர்கள்” : ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சி தகவல் - காரணம் என்ன தெரியுமா?
சமீப ஆண்டுகளாக காலநிலை மாற்றத்தால் வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை பேரழிவுகள் அதிகரித்து வருகின்றன. மேலும் உக்ரைன் போர், ஏழ்மை போன்ற செயற்கை பேரழிவுகள் காரணமாகவும், பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக இடம் பெயர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், இடம் பெயர்வு குறித்து ஆய்வு நடத்திய ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணை அமைப்பு, கடந்த ஆண்டில் வன்முறை, உணவுப் பாதுகாப்பின்மை, மனித உரிமை மீறல்கள், பருவநிலை மாற்றம், உக்ரைன் போர் போன்ற காரணங்களால் உலகம் முழுவதும் 10 கோடி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதிகபட்சமாக சீனாவில் மிகப்பெரிய அளவில் 60 லட்சம் இடம்பெயர்ந்துள்ளனர் எனவும், பிலிப்பைன்ஸில் 57 லட்சம் பேரும், இந்தியாவில் 49 லட்சம் பேரும் இடம்பெயர்ந்துள்ளனர் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதில் 2021ஆம் ஆண்டின் இறுதியில் போர், வன்முறை காரணமாக இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 9 கோடி என கூறப்பட்டுள்ளது.
இது முந்தைய ஆண்டின் எண்ணிக்கையைவிட எட்டு சதவீதம் அதிகரித்துள்ளது எனவும் அதே நேரம் இது 10 ஆண்டுகளுக்கு முந்தைய எண்ணிக்கையைவிட இருமடங்கு அதிகமாகும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பருவ நிலை மாற்றம் காரணமாக இடம் பெயர்ந்தவர்களில் பலர் வெகு விரைவில் தங்கள் சொந்த இடத்துக்கு திரும்புவர் எனவும், ஆனால் வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும்போது தங்கள் சொந்த இடத்துக்கு திரும்புவர் எண்ணிக்கை குறையும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!