India
”GST தீர்ப்பும், கூட்டாட்சி குறித்த கட்டுரைகளும் ஆர்வத்தை தூண்டுகிறது” : உச்சநீதிமன்ற நீதிபதி நெகிழ்ச்சி!
ஒன்றிய பா.ஜ.க அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்படும் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்றும் கடல் சரக்குகள் மீதான ஒருங்கிணைந்த வரியை ரத்து செய்தும் உத்தரவிட்டது.
குஜராத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது கடந்த மே 19 அன்று அதிரடியான தீர்ப்பை வழங்கி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.
அதில், “ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கும் முடிவுகளை அமல்படுத்த வேண்டும் என மாநில அரசுகளை ஒன்றிய அரசு நிர்பந்திக்க முடியாது. ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு அறிவுரைகள் மற்றும் பரிந்துரைகள் மட்டுமே வழங்கலாம். ஜி.எஸ்.டி கவுன்சில் பரிந்துரைகள் மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது. அப்படி செய்தால் அது கூட்டாட்சி அமைப்பை பாதிக்கும். இந்தியாவில் ஜனநாயகமும், கூட்டாட்சியும் ஒன்றை ஒன்று சார்ந்தே உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” எனவும் தெரிவித்திருந்தது.
இதனையடுத்து, உச்ச நீதிமன்றம் ஒன்றிய மாநில அரசுகளுக்கு இடையேயான கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநிறுத்தியுள்ளது என பல தரப்பிலிருந்தும் வரவேற்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில், ஜி.எஸ்.டிக்கு எதிராக ஜிண்டால் நிறுவனம் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரசூடு, அண்மையில் வழங்கப்பட்ட ஜி.எஸ்.டி. தீர்ப்பை சுட்டிக்காட்டி பேசியிருக்கிறார்.
அதில், “அந்த தீர்ப்பில் விவாதிக்கப்பட்ட கூட்டாட்சித் தத்துவம் குறித்த அம்சங்கள் தொடர்பாக பல்வேறு கருத்துகள் அடங்கிய கட்டுரைகள் வெளியாவது ஆர்வத்தை தூண்டியுள்ளது. அந்த தீர்ப்பை வழக்கறிஞரும் படித்திருக்கலாம் என நம்புகிறேன்” என்று நீதிபதி சந்திரசூடு கூறியுள்ளார்.
Also Read
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!