India
”நான் ஒரு இந்து.. விரும்பினால் மாட்டிறைச்சி சாப்பிடுவேன்”: இந்துத்வா கும்பலுக்கு சித்தராமையா பதிலடி!
இந்தியாவில் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்தே இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. குறிப்பாக மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் போன்ற பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களில் தினந்தோறும் இஸ்லாமியர்கள் பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர்.
மேலும், இந்துத்துவா கும்பல் மக்களின் உணவு உரிமைகளில் தலையிட்டு வருகிறது. இவர்கள் மாட்டிறைச்சியைச் சாப்பிடக்கூடாது என கூறி, மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நான் ஒரு இந்து. நான் விரும்பினால் மாட்டிறைச்சி சாப்பிடுவேன். அதை கேட்ட நீங்கள் யார் என கர்நாடக மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசியுள்ளார். கர்நாடகாவில் துமகுரு நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சித்தராமையா, "மனிதர்களுக்கு இடையே ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பிரிவினையை ஏற்படுத்தி வருகிறது. மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் ஒரு சமூகத்தை மட்டும் சேர்ந்தவர்கள் அல்ல.
இந்துக்கள் கூட மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள். கிறிஸ்தவர்களும் சாப்பிடுவார்கள். ஒருமுறை கர்நாடக சட்டசபையில் கூட அதைநான் சொல்லியிருக்கிறேன். நான் ஒரு இந்து. நான் இதுவரை மாட்டிறைச்சி சாப்பிடவில்லை. ஆனால் நான் விரும்பினால் மாட்டிறைச்சி சாப்பிடுவேன். என்னை கேள்வி கேட்க நீ யார்? இது உணவுப் பழக்கம். அது எனது உரிமை" என தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில், பசுக்கள் பாதுகாப்பு மற்றும் படுகொலை தடுப்பு சட்டம் 2020ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இந்த சட்டம், பசுக்கள், காளைகள், எருமைகள் உள்ளிட்ட கால்நடைகளை வியாபாரம் செய்வது சட்டவிரோதம் என கூறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!