India
பொறியியல் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் அதிகரிப்பு.. புதிய கட்டண விவரத்தை வெளியிட்டது AICTE !
நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் B.E., B.Tech., B.Arch., படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.55,000 , அதிகபட்ச கட்டணம் ரூ.1.15 லட்சம் என்றிருந்த நிலையில், குறைந்தபட்ச கட்டணம் ரூ.79,600 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.1,89,800 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்பதற்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, டிப்ளமோ படிப்புகளுக்கு குறைந்தபட்சமாக ஒரு செமஸ்டருக்கு ரூ.67,900, அதிகபட்சமாக ரூ.1,40,900 என்று கட்டணம் நிர்ணயம்.
M.E., M.Tech., M.Arch., படிக்க ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்சமாக ரூ.1,41,200, அதிகபட்சமாக ரூ.3,04,000 என்று கட்டணம் நிர்ணயம்.
தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் குறைந்தபட்ச கட்டணம் - அதிகபட்ச கட்டணத்துக்குள் தங்களுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்துகொள்ளலாம் எனக் குறிப்பிட்டு கட்டணக் குழுவின் பரிந்துரை அறிக்கையை வெளியிட்டது AICTE.
3 ஆண்டு MCA படிப்புக்கு குறைந்தபட்சமாக ரூ.88,500 ஆகவும், அதிகபட்சமாக ரூ.1,94,100 என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2 ஆண்டு MBA படிப்புக்கு குறைந்தபட்சமாக ரூ.85,000, அதிகபட்சமாக ரூ.1,95,200 என்று கட்டணம் நிர்ணயம்.
அதே வேளையில், பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கும் 7-வது சம்பள கமிஷன் வரையறுத்துள்ள ஊதியத்தை வழங்கிட வேண்டும் என்று AICTE உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, உதவிப் பேராசிரியர்களுக்கு மாதம் ரூ.1,37,189, பேராசிரியர்களுக்கு ரூ.2,60,379 என்று ஊதியம் நிர்ணயம். மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதை காரணம் காட்டி கட்டணத்தை குறைக்க கூடாது என்றும், மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பின், கல்வித் தரத்தை உயர்த்த முயற்சிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டப்பட்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!