India
ட்விட்டரில் ப்ளூடிக் கேட்டு வழக்கு தொடுத்த CBI அதிகாரி.. அபராதம் விதித்து டெல்லி ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
உலகம் முழுவதும் ட்விட்டரில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் அதிகாரிகள் பயன்படுத்தும் ட்விட்டர் பக்கத்திற்கு, அந்நிறுவனத்தின் சார்பில் ப்ளூடிக் அங்கீகாரம் கொடுக்கப்படுகிறது. இவர்களின் ட்விட்டர் பக்கத்தில் ப்ளூடிக் இருந்தால் மட்டுமே அது இவர்களின் சொந்த பக்கமாகும். போலி ட்விட்டர் பக்கங்களை அடையாளம் காணவே இந்த ப்ளூடிக் அங்கீகாரம் பிரபலங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சி.பி.ஐ அமைப்பின் இடைக்கால முன்னாள் தலைவராக இருந்த நாகேஸ்வரராவ் தொடர்ந்து சர்ச்சையான கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டு வந்ததால், அவரின் ப்ளூடிக் அங்கீகாரத்தை ட்விட்டர் நிறுவனம் ரத்து செய்துள்ளது.
இதனையடுத்து இது குறித்து நாகேஸ்வரராவ் ட்விட்டர் நிறுவனத்திடம் முறையிட்டும் அவருக்கு மீண்டும் ப்ளூடிக் கொடுக்கப்படவில்லை. இதனால் அவர் ட்விட்டரில் ப்ளூடிக் அங்கீகாரத்தை வழங்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், நாகேஸ்வரராவ் கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டும் என கோரி சில அறிவுறுத்தல்களை டெல்லி உயர் நீதிமன்றம் ட்விட்டர் நிறுவனத்திற்கு வழங்கியது.
ஆனால், நாகேஸ்வரராவ் நீதிமன்றம் உத்தரவிட்டும் தனக்கு ப்ளூடிக் அங்கீகாரம் வழங்கப்படவில்லை என மீண்டும் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், நாங்கள் கடந்த ஏப்ரல் 7ம் தேதிதான் உத்தரவிட்டோம். இதற்குள் நீதிமன்றத்தை நாடுவதற்கான அவசரம் என்ன வந்தது?
நாகேஸ்வரராவுக்கு நிறைய நேரம் இருக்கிறதுபோலும், அதனால் தான் இத்தகைய மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார். நீங்கள் எங்களிடம் இருந்து பரிசை எதிர்ப்பார்கின்றீர்கள். நாங்கள் உங்களுக்குப் பரிசாக ரூ.10 ஆயிரம் அபராதமும், உங்கள் மனுவையும் தள்ளுபடி செய்கிறோம் என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
Also Read
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !