India

“7 ஆண்டுகளாக சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை” : 81 வயது முதியவர் மீது பாய்ந்த ‘Digital Rape’ வழக்கு!

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் மௌரிஸ் ரைடர். 81 வயது முதியவரான இவர் கடந்த 7 வருடங்களாக சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி வந்துள்ளது அம்பலமாகியுள்ளது.

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் விசாரணை நடத்தியபோது முதியவர் சிறுமியை வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து போலிஸார் முதியவர் மௌரிஸ் ரைடர் மீது டிஜிட்டல் ரேப் பாலியல் குற்ற பிரிவில் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். வன்கொடுமைக்கு உள்ளான சிறுமிக்கு பெற்றோர் இல்லாததால், உறவினர் ஒருவர் வளர்த்து வந்துள்ளார். உறவினரும் முதியவர் மௌரிஸ் ரைடரும் நண்பர்களாக இருந்துள்ளனர். இந்நிலையில், சிறுமியை முதியவர் மௌரிஸிடம் பார்த்துக்கொள்ளும் படி ஒப்படைத்துள்ளார்.

ஆனால் முதியவர் மௌரிஸ் சிறுமியைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளாமல், 7 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து கொடுமை படுத்தி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. பெண்கள் மீதான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர் தனது ஆண் உறுப்பை அல்லாது, தனது வேறு பாகங்களைக் கொண்டு பாலியல் வன்புணர்வில் ஈடுபடுபவர்கள் மீதே டிஜிட்டல் ரேப் வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த வழக்கு 2012 நிர்பயா வழக்குக்குப் பின் தான் இந்தியா தண்டனைச் சட்டக் குற்றப்பிரிவில் சேர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “118 லிட்டர் தாய்ப்பால் விற்பனை” - பச்சிளம் குழந்தைகளின் பசியை போக்கிய இளம்தாய்.. நெகிழ்ச்சி சம்பவம்!