India
“மன்னிப்பு கேளுங்கள்; இல்லையென்றால்”: நடிகர் பிரகாஷ்ராஜ் உட்பட 61 பேருக்கு கொலை மிரட்டல்; சிக்கிய கடிதம்!
மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு 2வது முறையாக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து தலித் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் இந்துத்துவா கும்பல் நடத்தும் தாக்குதலை பா.ஜ.க அரசு வேடிக்கை பார்க்கிறது என தொடர்ந்து குற்றச்சாட்டுகளும் எழுந்துவருகிறது.
மேலும் அரசுக்கு எதிராகவும், இந்துத்துவா கும்பலுக்கு எதிராகவும் கருத்துத் தெரிவிப்போர் மீது இந்துத்வா அமைப்பைச் சேர்ந்தவர்கள் கொலைமிரட்டல் விடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். குறிப்பாக கர்நாடக மாநிலத்தில், இந்துத்வா கொள்கைகளுக்கு எதிராக, மோடி அரசின் பாசிச போக்கை கண்டித்து வந்ததால் இந்துத்வா கும்பலால் படுகொலை செய்யப்பட்ட கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர், கல்புர்கி போன்றோருக்காவும் வலுவாக குரல் எழுப்பிய கௌரி லங்கேஷ் இந்துத்வா கும்பலால் படுகொலை செய்யப்பட்டார்.
அதன்தொடர்ச்சியாக இந்துத்வா கும்பல்களின் மிரட்டல் போக்கு அதிகரித்து வரும் நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ், முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட 61 சமூக செயல்பாட்டாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னட எழுத்தாளர் வீரபத்ரப்பாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த கடிதம் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதியில் இந்து வந்துள்ளதாகக் கூறப்பட்டுகிறது. 6 பக்கம் கொண்ட அந்த கடிதத்தில் 61 பேர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் முன்னாள் முதல்வர்களான, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சித்தராமைய்யா, மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் குமாரசாமி, மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட 61 பெயர்களும் இடம்பெற்றிருந்தன. அதில் “சாஹிஷ்னு இந்து’ என்ற பெயரில் அனுப்பட்டுள்ளது.
கடித்தத்தில் நீங்கள் அனைவரும் இந்துக்களுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறீர்கள். இதனால் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால், இறந்துபோவதற்கு தயாராகுங்கள். நாங்கள் வெறும் காகித புலிகள் அல்ல. சொல்வதை செய்வோம்” என எச்சரித்துள்ளனர். இதனையடுத்து இதுதொடர்பாக போலிஸார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் எழுத்தாளர் வீரபத்ரப்பாவுக்கு 2வது முறையாக விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!