India
தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்களில் மாநிலங்களவை தேர்தல்.. தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்: முழு விவரம் இதோ!
தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 10ல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "21.06.2022 முதல் 1.08.2022 வரை நாட்டில் 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி காலியாகும் இடங்களுக்கான தேர்தலில் போட்டியிட, மே 24ம் தேதி முதல் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம், மனு தாக்கல் செய்ய கடைசி நாள் மே 31ம் தேதி ஆகும். இதுபோல், வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 1-ந்தேதி நடைபெறும், தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் திரும்ப பெற ஜூன் 3ம் தேதி கடைசி நாளாகும்.
ஜூன் 10ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்கு பதிவு நடைபெறும். அன்றைய தினமே மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்" என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை டி.கே.எஸ் இளங்கோவன், நவநீதகிருஷ்ணன், ஆர்.எஸ் பாரதி, எஸ்.ஆர் பாலசுப்ரமணியன், ஏ.விஜயகுமார், கே.ஆர்.என் ராஜேஷ்குமார் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூன் 29ல் நிறைவு பெறுகிறது.
இவரைகளை தவிர ஆந்திர மாநிலத்தில் 4 உறுப்பினர்களும், தெலங்கானா 2 , சத்தீஸ்கர் 2, மத்திய பிரதேசம் 3 , கர்நாடகா 4, ஒடிசா 3, மகாராஷ்டிரா 6,பஞ்சாப் 2, ராஜஸ்தான் 4, உத்தரபிரதேசம் 11,உத்தரகண்ட் 1, பீகார் 5, ஜார்கண்ட் 2, ஹரியானா 2 என மொத்த 15 மாநிகங்களில் 57 உறுப்பினர்களின் பதவிக்காலமும் நிறைவுபெறுகிறது.
இதனால் காலியாக உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 10ல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : வயநாட்டில் 46,000 வாக்குகளில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?