India
ஷவர்மா சாப்பிட்ட 16 வயது பள்ளி மாணவி பரிதாப பலி.. 17 பேருக்கு சிகிச்சை : கேரளாவை உலுக்கிய பகீர் சம்பவம்!
கேரள மாநிலம் கான்ஹாகட் மாவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தேவநந்தா. இவர் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவருடன் படிக்கும் 18 பேருடன் பள்ளியில் அருகில் உள்ள கடையில் ஷவர்மா சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்திலேயே ஒருவர்பின் ஒருவராக மயக்கம் அடைத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மருத்துவர்கள் அவர்களை பரிசோதித்ததில் உணவில் இருந்த நச்சால் மாணவர்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தனர். இதனிடையே சிகிச்சையில் இருந்த தேவநந்தா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 17 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்தபோலிஸார், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், உணவுப்பாதுகாப்பு படையினர் சோதனை செய்ததில், . பழைய கோழிக்கறியை பயன்படுத்தியது தெரியவந்ததையடுத்து, ஷவர்மா கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கிடையில் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். ஷவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!