India
வீடு புகுந்து 18 சவரன் நகையை அபேஸ் செய்த மேல்மாடி வளர்மதி.. புதுச்சேரியில் நடந்த துணிகரச் செயல்!
புதுச்சேரி முத்தியால்பேட்டை டி.வி.நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி அனிதா (38). சேதராப்பட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.
சம்பவத்தன்று அனிதா தனது 18 பவுன் நகைகளை வீட்டில் உள்ள பீரோவில் வைத்திருந்தார். பீரோ சாவியை வீட்டில் மறைவான இடத்தில் வைத்துவிட்டு வேலைக்கு சென்றார்.
பின்னர் வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த நகை காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.
இதுகுறித்து உடனடியாக முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் அனிதா புகார் செய்தார். அதன்பேரில் போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சந்தேகத்தின் பேரில் வீட்டின் மாடியில் வசித்த திண்டிவனத்தை சேர்ந்த வளர்மதி (32) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் 18 பவுன் நகைகள் திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலிஸார் கைது செய்தனர். மேலும் நகையையும் பறிமுதல் செய்தனர்.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !