India
“தாகமா இருக்கு..” - தண்ணீருக்கு பதில் ஆசிட் குடித்த கல்லூரி மாணவர்.. ஆந்திராவில் விபரீதம்: நடந்தது என்ன ?
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சைதன்யா. இவர் விஜயவாடாவில் உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பிடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று கல்லூரி அருகே உள்ள கடைக்கு சென்றுள்ள சைதன்யா அங்கு கடை உரிமையாளரிடம் குடிக்க தண்ணீர் பாட்டில் கேட்டுள்ளார். ’
கடைக்காரர் வேறொரு வேலையாக இருந்ததால் கடையில் இருக்கும் பிரிட்ஜில் உள்ளது. நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள் என்றுக் கூறியுள்ளார். இதையடுத்து சைதன்யா பிரிட்ஜின் உள்ளே இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து குடித்துள்ளார். அடுத்துக்கணமே அவர் சத்தம் போட்டு அலறியுள்ளார்.
தண்ணீர் குடித்தவர் ஏன் அலறி துடிக்கிறார் என கடை உரிமையாளர் அதிர்ச்சியுடன் பார்த்தபோதுதான், சைதன்யா தண்ணீர் பாட்டிலுக்கு பதில் ஆசிட் ஊற்றி வைத்திருந்த பாட்டிலை எடுத்து தவறுதலாக குடித்தது தெரிந்தது.
இதனையடுத்து அவரை அங்கிருந்த மாணவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து பிரிட்ஜில் ஆசிட் வைத்த கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !