India

ஆசை ஆசையாக சாக்லேட் வாங்க இந்தியாவிற்குள் நுழைந்த வங்கதேச சிறுவன்.. கைது செய்த போலிஸ்!

வங்கதேசத்தைச் சேர்ந்த எமன் ஹொசைன் என்ற சிறுவனுக்கு இந்தியாவில் விற்பனையாகும் சாக்லேட் ஒன்று மிகவும் விருப்பமான ஒன்று. இதனால் சிறுவன் எல்லைத் தடுப்புகளை மீறி சட்ட விரேதமாக திரிபுரா மாநிலத்திற்கு உட்பட்ட சிபாஹிஜாலா என்ற மாவட்டத்திற்குள் நுழைந்து அடிக்கடி சாக்லேட் வாங்கி சென்று வந்துள்ளார்.

இதேபோன்று சிறுவன் எமன் ஹொசைன் சம்பவத்தன்று எல்லை பகுதியில் இருந்து முள்வெளியில் இருந்த துளை வழியாக புகுந்து வெளியே வந்துள்ளார். இதைப்பார்த்து இந்திய எல்லையோர பாதுகாப்பு அதிகாரிகள் உடனே சிறுவனை பிடித்துள்ளனர்.

பிறகு அவரிடம் விசாரணை செய்தபோது சாக்லேட் வாங்க வந்ததாக கூறியுள்ளார். மேலும் சிறுவனிடம் 100 வங்கதேச ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளது. இதையடுத்து சிறுவனை போலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து பிரிந்து சென்ற நாடுதான் வாங்கதேசம். இதனால் இருநாட்டு எல்லைபகுதிகளில் இருக்கும் மக்களிடையே இனக்கமான ஒரு உறவு இருந்து வருகிறது. இதனால், இந்திய எல்லையோர பகுதிகளில் இருக்கும் இஸ்மியர்களை வெளியேற்றுவதற்காக ஒன்றிய அரசு சி.ஏ.ஏ, என்.ஆர்.சி போன்ற சட்டத்தை அமல்படுத்த துடித்துக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் சிறுபான்மையினர்களுக்கு அனுமதி வழங்க முடியாது என ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக ஏற்கெனவே நாட்டில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இப்படி இருக்கையில் சாக்லேட் வாங்குவதற்காக வந்த சிறுவனை சிறையில் அடைத்திருக்கும் இந்த நிகழ்வு சிறுபான்மையினர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியா எனும் பன்முகத் தன்மைக் கொண்ட நாட்டின் குறிக்கோளாக இருந்து வருகிறது. ஆனால் ஒன்றிய பாஜக அரசின் இது போன்ற சர்வாதிகார சட்டத்திருத்தங்களால் சொந்த நாட்டிலும் அயல் நாட்டில் இருந்து குடியேறும் சிறுபான்மையினர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

Also Read: ‘சன்னி லியோனின் தீவிர ரசிகரா நீங்கள்? இந்த தள்ளுபடி உங்களுக்குதான்’ - சிக்கன் கடைக்காரரின் நூதன விற்பனை!