India

”குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.. கணவனை விடுவியுங்கள்” -ராஜஸ்தானில் கோர்ட் படியேறிய ஆயுள் கைதியின் மனைவி!

குழந்தை பெற்றுக் கொள்வதற்காக கணவனுக்கு பரோல் கேட்டு விண்ணப்பித்த மனைவியின் மனு மீது ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் விடுத்த உத்தரவு பேசு பொருளாகியுள்ளது.

ராஜஸ்தானின் அஜ்மீர் பகுதியைச் சேர்ந்தவர் நந்தலால் (34). கடந்த 2018ம் ஆண்டு கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட நந்தலால் ஆயுள் தண்டனை பெற்று மத்திய சிறையில் உள்ளது.

இதனால் இல்லற வாழ்வில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இப்படி இருக்கையில் நந்தலால் உடன் சேர்ந்து குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் எனக் கேட்டு அவரது மனைவி ரேகா முதலில் மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு கொடுத்திருக்கிறார்.

ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ரேகா ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தை நாடி கணவர் நந்தலாலுக்கு பரோல் கொடுக்கும்படி கோரியிருக்கிறார். அவரது வழக்கு நீதிபதிகள் சந்தீப் மேக்தா, ப்ரசாந்த் அலி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ரேகாவின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் நந்தலாலுக்கு 15 நாட்கள் பரோல் வழங்கியுள்ளனர். மேலும், சிறையில் உள்ள ஆயுள் கைதியின் மனைவி எந்த குற்றமும் செய்யாதவர். அவர் குழந்தை பெற்றுக்கொள்ளும் உரிமை உள்ளது எனவும் கூறியுள்ளார்கள்.

Also Read: என் புருஷனுக்கும், உன் மனைவிக்கும் தெரிஞ்சுட்டா என்ன பண்றது?.. ரயில் முன் பாய்ந்து உயிரை விட்ட காதல் ஜோடி