India
கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும், பெட்ரோல் - டீசல் விலை உயர்வது ஏன்? : வல்லுநர்கள் கூறுவது என்ன?
ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே வரலாறு காணாத வகையில் பெட்ரோல் - டீசல் விலை உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் பல மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த பிறகு வாட் வரியை ஒன்றிய அரசு குறைத்தது. இதனால் பெட்ரோல் டீசல் விலை சற்று குறைந்தது. இதையடுத்து உத்தர பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றதால் 5 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருந்தது.
இதையடுத்து மார்ச் 22ம் தேதியிலிருந்து மீண்டும் பெட்ரோல்,டீசல் விலையை ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளது. அன்றைய தினத்திலிருந்து கடந்த ஏழு நாட்களில் மட்டும் ஆறு முறை பெட்ரோல் டீசல் விலை உயர்த்துள்ளது.
இதனால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 76 காசுகள் அதிகரித்து ரூ.105.94க்கும், ஒரு லிட்டர் டீசல் 67 காசுகள் அதிகரித்து ரூ.96க்கும் விற்பனையாகி வருகிறது. அடுத்தடுத்த நாட்களில் பெட்ரோல் விலை உயர்த்து வருவது வாகன ஓட்டுகளுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
கடந்த 8 நாட்களில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4.54, டீசல் விலை ரூ.4.57 அதிகரித்து,பெட்ரோல் விலை உயர்வுக்குச் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளதாக பா.ஜ.க கூறுகிறது.
ஆனால் உண்மையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. மார்ச் 21ம் தேதி ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் டாலருக்கு 115.62க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று விலை குறைந்து டாலருக்கு 108.97க்கு விற்பனை செய்யப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் தினந்தோறும் பெட்ரோல் விலை உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரியும் பட்சத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு தள்ளிப்போகும் வாய்ப்புள்ளதாகச் சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!