India
Dune படத்திற்காக ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்.. 7வது முறையாக ஆஸ்கர் வெல்லும் நமித் மல்கோத்ரா - யார் இவர்?
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் 2022 விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் 'Dune' திரைப்படம் சிறந்த தயாரிப்பு, வடிவமைப்பு, ஒளியமைப்பு, விஷுவல் எபக்ட்ஸ் உள்ளிட்ட 6 பிரிவுகளில் ஆஸ்கர் விருதை வென்று அசத்தியுள்ளது.
மேலும் King Richard படத்திற்காக முதல் முறையாக ஆஸ்கர் விருதை வென்றுள்ளார் நடிகர் வில் ஸ்மித். அதேபோல் 'Dune' திரைப்படத்தில் சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிக்காக நமித் மல்கோத்ராவுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. இந்தியரான இவரது நிறுவனம் வாங்கும் 7வது ஆஸ்கர் விருது இதுவாகும்.
ஏற்கனவே டெனெட் (2021), ஃபர்ஸ்ட் மேன் (2019), பிளேட் ரன்னர் 2049 (2018), எக்ஸ் மெஷினா (2016), இன்டர்ஸ்டெல்லர் (2015) மற்றும் இன்செப்ஷன் (2011) ஆகிய படங்களுக்கு ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளார்.
இந்த 7வது முறையாக Dune படத்திற்கும் இவருக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகி வெற்றி நடைபோட்டு வரும் ஆர்.ஆர்.ஆர். படத்திலும் நமித் மல்கோத்ரா பணியாற்றியுள்ளது. மேலும் ரன்பீர் கபூர், ஆலியா பட் நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாஸ்திரா படத்திற்கும் இவரது நிறுவனம் ஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
மும்பையைச் சேர்ந்த இவர் DNEG என்ற பெயரில் visual effects மற்றும் animation நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனம் தான் 7 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு