India

”WFHக்கு முழுக்கா? ஆஃபிஸுக்கு வரனுமா? வேலையே வேணாம்” - ஊழியர்கள் கருத்தால் அதிர்ச்சியில் நிறுவனங்கள்!

கொரோனா காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டதால் தனியார் நிறுவன ஊழியர்கள் பெரும்பாலும் வீட்டில் இருந்தபடியே கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்தனர்.

தொடக்கத்தில் வீட்டில் அலுவலக சூழல் இல்லாத நிலையில் சற்று களைப்படையச் செய்திருந்தாலும், காலப்போக்கில் குடும்பத்தினருடன் சரியான நேரத்தை செலவிட்டு, ஊழியர்கள் முறையாக பணியாற்றி வருகின்றனர்.

தற்போது நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வகையில் சரிந்திருப்பதால் மீண்டும் அலுவலகத்தில் இருந்தே வேலை செய்யும் பாணியை நிறுவனங்கள் கையில் எடுத்துள்ளன.

முன்னதாக ஐ.டி. போன்ற தனியார் நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே பணியாற்ற அனுமதித்த போது, இதனால் தங்களக்கு இடம், மின்சாரம் போன்றவற்றுக்கான செலவு குறைவதாக தெரிவித்திருந்தன.

ஆனால் நிறுவனங்களின் இந்த திடீர் மனமாற்றத்தால் ஊழியர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில் அலுவலகத்துக்கு வந்து செல்வதே ஒரு வேலையாக இருக்கும் சூழலில் வீட்டில் இருந்தபடியே பணியாற்றுவதை ஊழியர்கள் விரும்புகின்றனர்.

அந்த வகையில், இந்தியாவின் பிரபல ஆட்சேர்ப்பு நிறுவனமான CIEL HR Services நடத்திய ஆய்வில் ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே பணியாற்ற விரும்புவதாகவும், மீறி கட்டாயப்படுத்தினாலோ, அதிகமாக சம்பளமே கொடுத்தாலும் வேலையை விட்டு செல்வதற்கு 10ல் 6 பேர் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: டி.ராஜேந்தரின் கார் ஏறி ஒருவர் பலி.. அதிர்ச்சி கிளப்பும் CCTV காட்சி - நடந்தது என்ன?