India
திடீரென தீப்பற்றி எரிந்த வீடு... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு நேர்ந்த துயரம் - நடந்தது என்ன?
கேரள மாநிலம், வர்கலா அருகே உள்ள செருன்னியூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரதாபன். இவர் புத்தன்சந்தையில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஷெர்லி, மகன் அகில், மருமகள் அபிராமி, இவர்களது எட்டுமாத குழந்தை, மூத்த மகன் நிகில் ஆகியோர் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை இவர்களது வீடு திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனே காவல்துறைக்கும், தீயணைப்புத்துறைக்கும் தகவல் கொடுத்தனர்.
பின்னர், விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நான்கு மணி நேரம் கடும் போராட்டத்திற்கு பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். பிறகு வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பிரதாபன், ஷெர்லி, அகில், அபிராமி, 8 மாத குழந்தை உட்பட அனைவரும் உடல் கருகி உயிரிழந்து கிடந்தனர்.
மேலும், பலத்த தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நிகிலை மீட்டு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். பின்னர் 5 பேரின் உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த தீ விபத்து குறித்த முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இதில் ஏதாவது சதி வேலைகள் இருக்கிறதா என்பது குறித்தும் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!