India
Livin பேரில் கொடுமை;காதலில் விழவைத்து பெண்ணை கர்ப்பமாக்கிய பரிதாபம்; இளைஞருக்கு சுத்துப்போட்ட கேரள போலிஸ்
கேரளாவின் பாலா பகுதியைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (24). Dredge ஆபரேட்டராக பணியாற்றி வரும் இவர் இடுக்கி பீர்மேடுவைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் லிவ்-இன் முறையில் வாழ்ந்து வந்தார்.
அந்த பெண்ணுக்கு 2015ம் ஆண்டே திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக பிரிந்திருக்கிறார். இது தெரிந்த பிறகும் அந்த பெண்ணை அணுகி அவரை காதலிப்பதாகக் கூறியிருக்கிறார் ஹரி கிருஷ்ணன்.
சில காலத்திற்கு பிறகு ஹரி கிருஷ்ணனின் காதலை அப்பெண் ஏற்றுக்கொண்டது, இருவரும் கடந்த 2018ம் ஆண்டு முதல் திருமணம் செய்துக்கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
இப்படி இருக்கையில் கடந்த 2021ம் ஆண்டு அப்பெண் கர்ப்பமான பிறகு ஹரி கிருஷ்ணனின் செயலில் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. இது தொடர்பாக அப்பெண் அவரிடம் நேரடியாக கேட்டும் முறையான பதில் கிடைத்திருக்கவில்லை.
ஆனால் ஹரி கிருஷ்ணனுக்கும் நர்சிங் படிக்கும் பெண் ஒருவருக்கும் பழக்கம் இருப்பதை அறிந்த அப்பெண் கேட்டபோது ஆமாம் அவளைதான் திருமணம் செய்துக்கொள்ளப் போவதாக ஹரி கிருஷ்ணனும் கூறியிருக்கிறார்.
மேலும் கர்ப்பிணியான அப்பெண்ணையும் ஹரி கிருஷ்ணன் தாக்கியிருக்கிறார். கடந்த ஜனவரி மாதம் பெண்ணுக்கு குழந்தை பிறந்த பிறகும் ஹரி கிருஷ்ணனின் தாக்குதல் நின்றபாடில்லை.
Also Read: ”பாலியல் துன்புறுத்தலை மூடி மறைத்தாலும் போக்சோ பாயும்” - தாம்பரம் காவல் ஆணையர் ரவி கூறுவது என்ன?
இதனால் அவர் மீது அப்பெண் கேரள மாநில மகளிர் ஆணையத்தில் புகார் கொடுத்த பிறகு வண்டன்பாதலில் உள்ள மடத்தில் குழந்தையுடன் தஞ்சமடைந்திருக்கிறார்.
ஆனால் அவர்களை சமாதானம் செய்து விரைவில் திருமணம் செய்வதாகச் சொல்லி வீட்டுக்கு அழைத்து வந்த ஹரி கிருஷ்ணன் மீண்டும் அப்பெண்ணை கொடுமைப்படுத்தியிருக்கிறார்.
இதனால் டி.எஸ்.பி. ஷாஜு ஜோஸிடம் அப்பெண் புகாரளித்தன் பேரில் ஹரி கிருஷ்ணனை ஆஜராகச் சொல்லி சம்மன் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் ஹரி கிருஷ்ணன் ஆஜராகவில்லை. இதனையடுத்து பெண்ணையும் குழந்தையையும் கல்லராவில் உள்ள மஹிலா மந்தரில் போலிஸார் தங்க வைத்திருக்கிறார்கள்.
இதையறிந்த ஹரி கிருஷ்ணன் மார்ச் 3ம் தேதி பதிவுத் திருமணம் செய்துக் கொள்வதாகச் சொல்லி நோட்டீஸ் விடுத்ததால் நம்பி ரிஜிஸ்டர் அலுவலகம் சென்ற அப்பெண்ணுக்கு அப்போதும் ஏமாற்றமே கிட்டியது.
ஆகவே தன்னை நம்ப வைத்து ஏமாற்றி, கொடுமைப்படுத்தியது தொடர்பாக பாதிக்கப்பட்ட அப்பெண் மீண்டும் போலிஸிடம் புகாரளிக்க எஸ்கேப் ஆன ஹரி கிருஷ்ணனை பாலா மாவட்ட போலிஸார் கைது செய்திருக்கிறார்கள்.
Also Read
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்