India

“இருசக்கர வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் அணிவது கட்டாயம்!” : ஹூண்டாய் மோட்டார்ஸ் விழிப்புணர்வு பிரசாரம்!

சாலை விதிகளைப் பின்பற்றுவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் #BeTheBetterGuy எனும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன்.

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ், சமூக அக்கறையிலும் கவனம் செலுத்துகிறது. அந்தவகையில், கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியோடு இணைந்து #BeTheBetterGuy எனும் தலைப்பில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.

சாலைகளில் நடந்து செல்லும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்தும், வாகனங்களில் செல்வோர் கவனத்தில் கொள்ள வேண்டிய விதிமுறைகள் குறித்தும் இந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் வலியுறுத்தப்படுகிறது.

சாலை போக்குவரத்து விதிகளைச் சரிவரக் கடைபிடித்து மற்றவர்களுக்கு இடையூறு செய்யாமல் பயணிப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 1.5 லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர். இந்தியாவில் நடைபெற்ற சாலை விபத்துகளால் மட்டும், ஒவ்வொரு 3.5 நிமிடத்துக்கும் ஒருவர் உயிரிழப்பதாகக் கூறப்படுகிறது.

இருசக்கர வாகன விபத்துகளில் சிக்குவோர் பெரும்பாலும் உயிரிழப்பதற்கு காரணம் அவர்கள் தலைக்கவசம் அணியாமல் இருப்பதுதான் என தொடர்ந்து எச்சரிக்கப்பட்டு வருகிறது.

மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம். ஹெல்மெட் கட்டாயம் என்பது தொடர்பாக உச்சநீதிமன்றம், அனைத்து உயர் நீதிமன்றங்கள் பல்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளன.

மதிப்புமிக்க மனித உயிர்களை காப்பாற்ற, அனைத்து இருசக்கர வாகன ஓட்டிகளும், பின் இருக்கையில் பயணிப்பவர்களும், ISI முத்திரை பெற்ற ஹெல்மெட் அணிவது கட்டாயம்!

Also Read: “வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தாதீர்! : Hyundai Motors & கலைஞர் செய்திகள் விழிப்புணர்வு பிரசாரம்!