India
“ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்.. தோல்வியில் முடிந்த 16 மணி நேரப் போராட்டம்” : நடந்தது என்ன?
மத்திய பிரதேச மாநிலம், பத்சத் கிராமத்தைச் சேர்ந்த கரவ் துபே என்ற 4 வயது சிறுவன் அப்பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி உள்ளே விழுந்துள்ளான். இதுபற்றி தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று சிறுவனை மீட்பதற்கான முயற்சியில் இறங்கினர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து 16 மணிநேர போராட்டத்திற்குப் பின்பு சிறுவனை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
பின்னர், பெற்றோர்களின் முன்னிலையில் சிறுவன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 16 மணி நேரத்திற்குப் பிறகு சிறுவன் சடலமாக மீட்கப்பட்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோகம் முடிவதற்குள் ராஜஸ்தான் மாநிலம், சிகார் மாவட்டத்திற்கு உட்பட்ட சிறுவன் ஒருவன் 55 அடி அழ ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளார். சிறுவனை உயிருடன் மீட்பதற்கான பணிகளை அம்மாநில அரசு முடக்கியுள்ளது.
உலகம் முழுவதுமே ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் விழுந்து உயிரிழப்பு சம்பவங்களுக்கு முடிவு இல்லாமல் தொடர்கதையாகவே இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு! : அதானி விவகாரம் குறித்து விவாதிக்க மறுப்பு!
-
மருத்துவப் படிப்புகளுக்கான 135 காலிப்பணியிடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு! : இன்று முதல் தொடக்கம்!
-
“அகப்பட்டுக் கொண்டார் அதானி - பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன்?” : மோடியை வெளுத்து வாங்கிய முரசொலி!
-
”மொழியையும், கலையையும் காக்க வேண்டும்!” : முத்தமிழ்ப் பேரவையின் பொன்விழா - முதலமைச்சர் உரை!
-
“திட்டமிட்டு பழிவாங்கும் போக்கை ஆளுநர் ஆர்.என்.ரவி கைவிட வேண்டும்!” : தொல். திருமாவளவன் கண்டனம்!