India
“உயிரிழப்பை தடுக்க சீட் பெல்ட் அணிவீர்!”: ஹூண்டாய் மோட்டார்ஸ் - கலைஞர் செய்திகள் விழிப்புணர்வு பிரசாரம்!
சாலை விதிகளைப் பின்பற்றுவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் #BeTheBetterGuy எனும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன்.
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ், சமூக அக்கறையிலும் கவனம் செலுத்துகிறது.
அந்தவகையில், கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியோடு இணைந்து #BeTheBetterGuy எனும் தலைப்பில் தொலைக்காட்சி - இணைய - சமூகவலைதள விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.
சாலைகளில் நடந்து செல்லும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்தும், வாகனங்களில் செல்வோர் கவனத்தில் கொள்ள வேண்டிய விதிமுறைகள் குறித்தும் இந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் வலியுறுத்தப்படுகிறது.
சாலை போக்குவரத்து விதிகளைக் கடைபிடித்து மற்றவர்களுக்கு இடையூறு செய்யாமல் பயணிப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 1.5 லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர். இந்தியாவில் நடைபெற்ற சாலை விபத்துகளால் மட்டும், ஒவ்வொரு 3.5 நிமிடத்துக்கும் ஒருவர் உயிரிழப்பதாகக் கூறப்படுகிறது.
உலகச் சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கையின்படி, ஒருவர் காரின் முன்பக்க இருக்கையில் பயணிக்கும்போது சீட் பெல்ட்டை சரியாக அணிவதால், அவர் விபத்தின்போது காயமடைவதற்கான சாத்தியம் 50 சதவிகிதம் குறைவு. இதுவே பின்பக்க இருக்கை என்றால், அது 75 சதவிகிதம் குறைவு.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ஒருவர் காரில் Seat Belt அணிந்து பயணிக்கும்போது விபத்து நேர்ந்தாலும்கூட, அவர் விபத்தில் உயிரிழப்பதிலிருந்து 61 சதவிகிதம் தப்பித்துவிடுவார் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. எனவே, காரில் பயணிக்கும்போது கட்டாயம் சீட் பெல்ட் அணிவோம்!
Also Read
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!