India
வாக்காளர்களுக்கு மிரட்டல் .. பா.ஜ.க வேட்பாளருக்கு தடை விதித்த இந்திய தேர்தல் ஆணையம்!
உத்தர பிரதேச மாநில சட்டமன்ற தேர்தல் ஏழு கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தை அடுத்து முதல் மூன்று கட்ட தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் 59 சட்டமன்ற தொகுதிகளுக்கு நான்காம் கட்டமாக இன்று வாக்குபாதிவு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள் என்று வாக்காளர்களை மிரட்டிய பாஜக வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது. தடைவிதித்துத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அமேதி மாவட்டம் திலோய் தொகுதியில் பா.ஜ.க சார்பில் மயேங்கேஷ்வர் சரண்சிங் போட்டியிடுகிறார். இவர் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய போது, இந்தியாவில் வாழவேண்டும் என்றால் ராதே ராதே என்று முழக்கமிட வேண்டும். இல்லை என்றால் நாடு பிரிந்தபோது பாக்கிஸ்தானுக்குச் சென்றவர்களைப் போல் நீங்களும் போகலாம். இந்தியாவில் இருக்கத் தேவை இல்லை என தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டன குரல்கள் எழுந்ததை அடுத்து இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், தேர்தல் விதிமீறல் என்று கூறி நாளை காலை 8 மணி முதல் 24 மணி நேரத்துக்கு எந்தவகையான தேர்தல் பிரச்சாரமும் செய்யக்கூடாது என கூறி மயேங்கேஷ்வர் சரண்சிங்கிற்கு இந்திய தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது.
Also Read
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு