India

14 அல்ல 27 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த 54 வயது முதியவர்.. பூதாகரமாகும் கல்யாண மன்னன் மோசடி!

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த காமேஷ் சந்திர ஸ்வைன் (54) என்பவர் 14 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய வழக்கில் போலிஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் காமேஷ் 14 பெண்களை அல்ல 27 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியது அம்பலமாகியுள்ளது.

இவருக்கு 1982ம் ஆண்டு முதல் திருமணம் நடைபெற்றது. பின்னர் 2002ம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இந்த திருமணங்கள் மூலம் இவருக்கு ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளனர்.

பின்னர் காமேஷ் ஒன்றிய சுகாதாரத்தில் பணியாற்றும் மருத்துவர் என கூறி 2002ம் ஆண்டிலிருந்து 2020 வரை பல்வேறு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். அந்த பெண்கள் அனைவரும் பஞ்சாப், டெல்லி, அசாம், ஜார்கண்ட், ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

இந்நிலையில்தான் 14வதாக பள்ளி ஆசிரியர் ஒருவரை திருமணம் செய்துள்ளார். இவர்தான் இவருக்கு ஏற்கனவே பல திருமணங்கள் நடைபெற்றுள்ளதைக் கண்டுபிடித்து போலிஸில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் தான் போலிஸார் இவரை கைது செய்தனர்.

இவரிடம் நடத்திவரும் விசாரணையில்தால் 27 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து ஒடிசா மாநில காவல்துறை ஆணையர் சஞ்சீவ் சத்பதி “ரமேஷ் குமார் ஒரு விலாசத்தில் நீண்ட நாட்கள் தங்கி இருப்பது இல்லை. தன்னுடைய இடத்தை அடிக்கடி அவர் மாற்றிக் கொண்டே இருந்துள்ளார்.

அவர் இதுவரை 27 பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்துள்ளது விசாரணாயில் தெரியவந்துள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

Also Read: ”சந்திரமுகியா மாறின கங்கா மொமண்ட்” : free fire விளையாட்டால் வந்த வினை; மும்பையில் நடந்த பகீர் சம்பவம்!