India
”சந்திரமுகியா மாறின கங்கா மொமண்ட்” : free fire விளையாட்டால் வந்த வினை; மும்பையில் நடந்த பகீர் சம்பவம்!
மும்பையைச் சேர்ந்த 13 வயது சிறுவன் சேதன் கனோல்கர் தனது செல்போனில் தினமும் free fire கேம் விளையாடி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அவனது பெற்றோர் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளனர்.
அப்போது, தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டிருந்ததை கண்டு பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த தற்கொலை குறித்து போலிஸார் விசாரணை நடத்தியபோது, free fire விளையாட்டிற்கு அடிமையானதால் சிறுவன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. மேலும் சிறுவன் அந்த விளையாட்டில் வரும் கதாபாத்திரத்தின் ஆடையை அணிந்து கொண்டே தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதனால், அந்த கதாபாத்திரம் சிறுவனை மனரீதியாக பாதித்திருக்க வாய்ப்புள்ளதால் இந்த முடிவை அவர் எடுத்திருக்கக் கூடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சிறுவனுடன் free fire கேம் விளையாடிய மற்ற சிறுவர்களிடம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
”அதானியை உடனே கைது செய்ய வேண்டும்” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!