India
Leave கொடுக்க மறுத்த அதிகாரிகள்.. ஓடும் ரயில் முன்பு பாய்ந்து ரயில்வே ஊழியர் தற்கொலை:உ.பி.யில் அதிர்ச்சி!
உத்தர பிரதேச மாநிலம் பத்பூவர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் சிங். இவர் ரயில்வேயில் டிராக்மேனாக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் வரும் 19ம் தேதி ரமேஷ் சிங்கின் மைத்துனருக்குத் திருமணம் நடைபெற உள்ளது. இதனால் ரமேஷ் அதிகாரிகளிடம் விடுமுறை கேட்டுள்ளார். ஆனால் அவருக்கு விடுப்பு மறுக்கப்பட்டுள்ளது.
இதனால், மன உளைச்சல் அடைந்த அவர் சரக்கு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவர் தற்கொலை செய்து கொள்ளும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து 72 மணி நேரத்தில் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ரயில்வே உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளது.
Also Read
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
”அதானியை உடனே கைது செய்ய வேண்டும்” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!