India
டெல்லியில் அடித்து உ.பி., பீகாரில் விற்பனை: சொகுசு காரில் வைத்து திருட்டு தொழில் - லாலா கேங்கின் பின்னணி?
டெல்லியில் லாலா கேங் என்ற திருட்டு கும்பலை கடந்த வாரம் புதனன்று போலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த லாலா கும்பல் பற்றிய விவரங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் 24ம் தேதியன்று ரன்தீப் சிங் என்பவர் தலேர் மெஹந்தி குருத்வாராவில் நடந்த திருட்டு சம்பவம் குறித்து பி.எஸ்.நிஹல் விஹார் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் மூலம் தெரிய வந்திருக்கிறது.
புகாரின் மீது விசாரணையை தொடங்கிய போலிஸார் சொகுசு காரில் வைத்து திருட்டு தொழிலை நடத்தியிருப்பது சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததன் மூலம் தெரிய வந்திருக்கிறது.
பின்னர் நாங்லோய் என்ற பகுதியில் அந்த கார் உலா வருவது தொடர்பாக தகவல் கிடைத்ததை அடுத்து, வாகனத்தை ஓட்டி வந்த டெல்லியைச் சேர்ந்த ஜக்மோஹன் பிட்டு (49) போலிஸிடம் பிடிபட்டிருக்கிறார். அந்த காரையும் பறிமுதல் செய்து போலிஸார் விசாரணையை முடுக்கிவிட்டிருக்கிறார்கள்.
அப்போது, பிட்டுவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தான் லாலா கேங்கை சேர்ந்தவன் என்றும், தன்னிடம் அந்த காரை கும்பலை சேர்ந்தவர்கள் வழங்கியுள்ளனர். லாலா என்பவர் தன்னை தொடர்புகொண்டு திருட்டு வேலைகளை செய்வதற்காக கமிஷனை கொடுப்பார் என்றும் கூறியிருக்கிறார். மேலும், பிட்டுவின் பிரதான வேலையாக திருடப்பட்ட பொருட்களை ஏற்றி வந்து அதனை விற்பதாக இருந்திருக்கிறது.
இதனையடுத்து 'Sendh-Mar’ என்ற தனிப்படை குழுவை அமைத்து அந்த லாலா கேங்கை தீவிரமாக தேடி வந்திருக்கிறது டெல்லி போலிஸ். நீண்ட நாளாக நடத்தப்பட்டு வந்த தேடுதல் வேட்டையில் கடந்த புதனன்று போலிஸார் அந்த கும்பல் தொடர்பாக துப்பு கிடைத்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, பிரபலமற்ற லாலா கும்பல் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
திருடப்பட்ட பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை முண்ட்காவில் உள்ள குடோனில் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் போலிஸாரிடம் தெரிவித்தனர். குற்றவாளிகளிடம் இருந்து திருடப்பட்ட நான்கு வாகனங்கள், திருடப்பட்ட ஆடைகள் மற்றும் பிற பொருட்களையும் போலிஸார் பறிமுதல் செய்தனர்.
இதனிடையே டெல்லியில் திருடப்படும் பொருட்களை வைத்து உத்தர பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் விற்பனை செய்து வருவதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Also Read
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு