India
“மீண்டும் அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு.. 3 ஆண்டில் 22 லட்சம் பேர் பலி”: ஒன்றிய அரசு அதிர்ச்சி Report!
இந்தியாவில், 2018ம் ஆண்டிலிருந்து 2020ம் ஆண்டு வரை 40 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 22.54 லட்சம் பேர் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளதாக நேற்று நடைபெற்ற மக்களவை கூட்டத்தில் ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
கேள்விக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “கடந்த 2018ம் ஆண்டு 7,33,139 பேரும், 2019ம் ஆண்டு 7,51,517, 2020ம் ஆண்டு 7,70,230 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த புள்ளி விவரங்களைப் பார்க்கும்போது ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 20 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் அதிகரித்துள்ளது.
ஆரோக்கிய நடவடிக்கைகள் மற்றும் இலக்கு தகவல் தொடர்புகளை மேம்படுத்துவது மூலம் புற்றுநோயைத் தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் புற்றுநோய் மரணங்களைத் தடுக்க பா.ஜ.க அரசு சரியா நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !