India
”பாம்புடன் முட்டி மோதி தன்னை வளர்த்தவர்களை காப்பாற்றிய செல்லப்பிராணி” - புதுச்சேரியில் நடந்த நெகிழ்ச்சி!
புதுச்சேரியில் வீட்டுக்குள் புகுந்த கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை, தடுத்து போராடி கொன்று தன்னை வளர்த்த எஜமானரின் குடும்பத்தை காப்பாற்றிய நாயின் செயல் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, புதுச்சேரி அருகே மூலக்குளம் ஆசிரியர் காலனியை சேர்ந்த ரமணி என்ற கல்வித்துறை அதிகாரி.
இவரது வீட்டிற்குள் புக முயன்ற விஷப்பாம்பை, அவரது வளர்ப்பு நாயான மிஸ்ட்டி போராடி கொன்றிருக்கிறது.
மேலும் பாம்பு கடித்து விஷம் ஏறியதால் நாய்க்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், கால்நடை மருத்துமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது நாய் நலமுடன் உள்ளது.
வீட்டுக்குள் புகுந்த கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை தடுத்து போராடி கொன்று தன்னை வளர்த்த எஜமானரின் குடும்பத்தையே நாய் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!