India

"இது NDA அரசல்ல.. NO Data Available அரசு": மாநிலங்களவையில் ப.சிதம்பரம் விமர்சனம்!

மாநிலங்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ப.சிதம்பரம் பேசும்போது இது NDA அரசல்ல.. NO Data Available அரசு என ஒன்றிய அரைசை விமர்சித்துள்ளார்.

இது குறித்து மேலும் பேசிய ப.சிதம்பரம்,"2021ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் 8.72 லட்சம் வேலைவாய்ப்புகள் இருந்தன. ஆனால் இந்தாண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் 78 ஆயிரம் வேலைவாய்ப்புகள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன.

மேலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்து பட்ஜெட்டில் தெளிவாகச் சொல்லப்படவில்லை. காங்கிரஸ் கட்சி கேட்கும் கேள்விகளுக்கு ஒன்றிய அரசால் பதிலளிக்க முடியவில்லை. இவர்களிடம் எந்த பதிலை கேட்டாளும் இல்லை என்ற பதில் மட்டுமே வருகிறது.

குறிப்பாக, கொரோனா காலத்தில் கங்கையில் வீசப்பட்ட சடலங்கள் குறித்து புள்ளி விவரம் கேட்டாள் அவர்களிடம் பதில் இல்லை. அதேபோல் கொரோனா ஊரடங்கின் போது நடந்து சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய தகவல் இல்லை. இப்படி எதைக் கேட்டாளும் புள்ளி விவரங்களைத் தராதா NDA அரசை NO Data Available Government என அழைக்கலாம் என தெரிவித்துள்ளார்.

Also Read: "கொரோனாவை பரப்பியதே காங்கிரஸ் கட்சிதான்".. மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு!