India
"நான் கவலைப்படவில்லை - ஹிஜாப் அணிவேன்.. ".. காவித்துண்டு கும்பலுக்கு இஸ்லாமிய மாணவி பதிலடி!
கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்த மாணவி ஒருவரை அங்கிருந்த காவித்துண்டு அணிந்திருந்த சில மாணவர்கள் அவரை சூழ்ந்து கொண்டு ஜெய் ஸ்ரீராம் கோஷமிட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அந்த மாணவி நான் தொடர்ந்து ஹிஜாப் அணிவேன் என தெரிவித்துள்ளார். இது குறித்து அந்த மாணவி செய்தி நிறுவனம் ஒன்றிற்குப் பேட்டி அளித்துள்ளார்.
மாணவியின் அந்த பேட்டியில், நான் கவலைப்படவில்லை. நான் கல்லூரிக்குள் நுழைந்தபோது நான் பர்தா அணிந்திருந்ததால் அவர்கள் என்னை அனுமதிக்கவில்லை. நான் எனது அசைன்மென்ட்டை ஒப்படைக்கவே கல்லூரிக்கு வந்தேன்.
அப்போது, அவர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று கத்த ஆரம்பித்தார்கள். அதனால் நான் அல்லா ஹு அக்பர் என்று கோஷமிட்டேன். பின்னர் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் என்னை ஆதரித்து பாதுகாத்து கூட்டின் சென்றனர்.
காவித்துண்டு அணிந்திருந்த அந்த குழுவில் உள்ள 10 % பேர் எங்கள் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள். ஆனால் மீதிப்பேர் வெளியாட்கள். நான் தொடர்ந்து நான் தொடர்ந்து ஹிஜாப் அணிவேன். இதற்கான போராட்டம் தொடரும். ஆடைக்காக அவர்கள் கல்வியை அழிக்கிறார்கள்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!