India

புஷ்பா படத்தால் வந்த வினை.. செம்மரக்கட்டையை கடத்திய இளைஞருக்கு நேர்ந்த கதி என்ன தெரியுமா?

நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி என நான்கு மொழியில் வெளிவந்த படம் 'புஷ்பா". இந்த படம் வெளியான 50 நாட்களில் உலகளவில் 365 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை படைத்துள்ளது.

செம்மரக்கட்டையை கடத்தல்தான் இந்தப் படத்தின் மையக்கதை. இதில் போலிஸார் கண்ணில் மண்ணைத் தூவி செம்மரங்களை கடத்தி செல்லும் காட்சிகளை ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.

இந்நிலையில் புஷ்பா படத்தில் எப்படி செம்மரக்கடைகள் கடத்தப்படுகிறது என்பதை பார்த்த இளைஞர் ஒருவர் அப்படியே அதை செய்து பார்த்து போலிஸாரிடம் சிக்கிக் கொண்டுள்ளார்.

வாகன ஓட்டுநரான யாசீன் இனாயத்துல்லா என்ற வாலிபர் லாரிக்கு அடியில் செம்மரக்கடடைகளை மறைத்து அதற்கு மேல் காய்கறி மற்றும் பழங்கள் அடங்கிய பெட்டியை வைத்துள்ளார். மேலும் கொரோனா அத்தியாவசிய பொருட்கள் அவசரம் என்ற ஸ்டிக்கரையும் வாகனத்தில் ஒட்டியுள்ளார்.

பின்னர் இந்த லாரியை ஆந்திரா எல்லையிலிருந்து மகாராஷ்டிராவிற்கு ஓட்டிச் சென்றுள்ளார். இதையடுத்து மகாராஷ்டிராவின் சங்கிலி மாவட்டத்திற்குட்பட்ட எல்லையில் சோதனையில் ஈடுபட்டிருந்த போலிஸார் அவரது வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது, காய்கறி மற்றும் பழங்களுக்குள் மறைத்துவைக்கப்பட்டிருந்த செம்மரக்கட்டைகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இவரிடம் இது குறித்து விசாரணை நடத்தியதில் புஷ்பா படத்தில் வரும் பால் டேங்கிற்கு அடியில் கட்டை கடத்தும் காட்சியைக் கொண்டு இப்படி செம்மரங்களைக் கடத்தி வந்ததாகக் கூறியுள்ளார்.

இதையடுத்து போலிஸார் வாலிபர் யாசீன் இதயத்துல்லாவைக் கைது செய்தனர். மேலும் லாரியில் கொண்டுவரப்பட்ட கட்டைகளில் மதிப்பு ரூ.2.45 கோடி இருக்கும் என போலிஸார் தெரிவித்துள்ளனர்.

Also Read: தலையில் கல்லைப் போட்டு வாலிபர் கொடூர கொலை .. 2 பேர் கைது: விசாரணையில் அதிர்ச்சி!