India
ஒருபுறம் முதல்வர் ஸ்டாலின் கடிதம்.. மறுபுறம் ராகுல் பேச்சு : ஒரேநாளில் விழுந்த அடியால் திணறிப்போன பா.ஜ.க!
தி.மு.க தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடந்த ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று காணொலி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில், அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு தொடங்கப்படும் என வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பினை வெளியிட்டார்.
இவரது இந்த அறிவிப்பு இந்தியா முழுவதும் பேசுபொருளானது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் முதலமைச்சருக்குப் பாராட்டு வாழ்த்து தெரிவித்தனர்.
இதையடுத்து நேற்று சமூகநீதி காக்க கைகோப்போம் என அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணையுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட 37 தலைவர்களுக்குக் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த கடிதம் இந்திய அளவில் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முதன்மைப்படுத்தியுள்ளது.
இந்திய அளவில் சமூக நீதிக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துவரும் நடவடிக்கைகள் பா.ஜ.க தலைவர்களின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. மேலும் தமிழ்நாட்டு முதலமைச்சர் இந்திய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளாரே என பா.ஜ.கவின் வயிற்றெரிச்சலில் இருந்த நிலையில் அன்றைய தினம் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பேசியது அவர்களை பீதியடையச் செய்துள்ளது.
நேற்று நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் ராகுல் காந்தி எம்.பி, "நீட் தேர்வு விலக்கு வேண்டும் என தமிழ்நாடு உங்களிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. தமிழகத்தின் கோரிக்கைகள் உங்கள் காதுகளுக்கு எட்டவில்லை. தமிழகம் மீண்டும் மீண்டும் நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என்று உங்களிடம் கோரிக்கை வைக்கும். நீங்கள் மறுத்து அவர்களை வெளியேற்றுகிறீர்கள். மக்களின் கருத்தை அரசர் கேட்காதது போல உங்கள் அரசு செயல்படுகிறது. உங்களால் ஒருபோதும் தமிழ்நாட்டு மக்களை ஆளமுடியாது" எனப் பேசினார்.
பின்னர் வெளியே வந்த ராகுலிடம் செய்தியாளர்கள், தமிழ்நாடு குறித்து அதிகமுறை உச்சரித்தது ஏன் என அவரிடம் கேள்வியெழுப்பினர். இதற்கு அவர் நான் ஒரு தமிழன் என பதிலளித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
ஒருபுறம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 37 அரசியல் கட்சித் தலைவர்களுக்கான கடிதம், மறுபுறம் நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தியின் பேச்சு இவை இரண்டுமே தமிழ்நாட்டை மையப்படுத்தி இருந்ததால் பா.ஜ.க தலைமை திணறிப்போயுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!