India
இந்தியாவின் பட்ஜெட்: சுதந்திரத்துக்கு முன்பும் பின்பும் எப்படியாக இருந்தது தெரியுமா? சுவாரஸ்ய தகவல்!
ஒன்றிய பாஜக அரசின் இரண்டாவது காகிதமில்லாத நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வாசித்திருக்கிறார்.
ஒவ்வொரு நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை பிப்ரவரி மாத தொடக்கத்தின் வெளியிடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இப்படி இருக்கையில், இந்தியாவில் இதற்கு முன்பு பின்பற்றப்பட்ட பட்ஜெட் பாரம்பரியம் எப்படியாக இருந்தது என்பது குறித்து இங்கு காணலாம்.
1) இந்தியாவில் முதல் முதலில் 1860ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்த போது கிழக்கு இந்திய கம்பெனியின் ஸ்காட்டிஷ் பொருளாதார வல்லுநரான ஜேம்ஸ் வில்சன் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
2) நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் முதல் முதலில் 1947ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதியன்று அப்போதைய நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியால் பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
3) ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை 1955ம் ஆண்டு வரை ஆங்கிலத்திலேயே தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகே இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பட்ஜெட் அறிக்கை அச்சிடப்பட்டது.
4) 1999ம் ஆண்டு வரைக்கும் ஒன்றிய நிதிநிலை அறிக்கை பிப்ரவரி மாதத்தின் கடைசி வேலை நாட்களின் போது மாலை 5 மணியளவிலேயே தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இது ஆங்கிலேயர்கள் காலத்து மரபாக இருந்து வந்தது.
இந்த வழக்கத்தை அப்போதைய நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹா மாற்றினார். அதன் பிறகே காலை 11 மணிக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடர்ந்து வருகிறது. அதன்படியே முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி பிப்ரவரி 1ம் தேதி காலை 11 மணிக்கு வாசிக்கும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது.
5) இந்தியாவின் பட்ஜெட் வாசிப்பில் இதுவரையில் மிகக்குறைந்த அளவில் நிதிநிலை அறிக்கையை வாசித்த நிகழ்வு 1977ம் ஆண்டு நிகழ்ந்துள்ளது. வெறும் 800 வார்த்தைகளையே கொண்ட பட்ஜெட் உரையை எச்.எம்.படேல் நிதியமைச்சராக இருந்தபோது வாசித்திருந்தார்.
6) முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 1991ம் ஆண்டு நிதியமைச்சராக இருந்த போது 18 ஆயிரத்து 650 வார்த்தைகள் அடங்கிய நிதிநிலை அறிக்கையை வாசித்திருந்தார். அவரை அடுத்து 2018ம் ஆண்டு அருண் ஜேட்லி 18,604 வார்த்தைகளை கொண்ட பட்ஜெட் அறிக்கையை வாசித்தார்.
7) நீண்ட நேரம் பட்ஜெட் உரையை வாசித்த பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றிருந்தார். அதன்படி 2020ம் ஆண்டு நடந்த பட்ஜெட் தாக்கலின் போது 2 மணிநேரம் 42 நிமிடங்களாக நிதிநிலை அறிக்கையை வாசித்திருந்தார். அப்போது கடைசியாக 2 பக்கங்கள் இருக்கும் போது தன்னால் முழுமையாக படிக்க முடியாமல் போனல் அதற்குமட்டும் சுருக்கமாக உரையாற்றினார்.
8) 2017ம் ஆண்டு வரையில் ரயில்வே பட்ஜெட்டும், பொது பட்ஜெட்டும் தனித்தனியாகவே தாக்கல் செய்யப்பட்டு வந்தது. 92 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த இந்த நடைமுறை ஒன்றிய பாஜக அரசால் மாற்றப்பட்டு 2017 முதல் பொது மற்றும் ரயில்வே பட்ஜெட் ஒன்றாக இணைத்தே வாசிக்கப்பட்டு வருகிறது.
9) முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு பிறகு இந்தியாவில் பெண் நிதியமைச்சராக பட்ஜெட் அறிக்கை வாசித்தது நிர்மலா சீதாராமன். 2019ல் பட்ஜெட் வாசிப்பை தொடங்கிய நிர்மலா சீதாராமன் இன்று நிறைவடைந்த பட்ஜெட் வரை தொடர்ந்து 4 வது முறையாக வாசித்தார். 1970-71ம் ஆண்டுக்கான ஒன்றிய நிதி நிலை அறிக்கையை பெண் நிதியமைச்சராக இருந்த இந்திரா காந்தி வாசித்திருந்தார்.
10) ஆங்கிலேயர்களின் வழக்கமான சிவப்பு சூட்கேஸில் வைத்து பட்ஜெட் அறிக்கையை கொண்டு வரும் வழக்கத்தை விடுத்து Bahi Khata எனும் நாடா துணியால் சுற்றப்பட்டு தேசிய சின்னத்துடன் கூடிய துணிப்பையில் வைத்து பட்ஜெட் ஆவணம் கொண்டு வரும் பழக்கத்தை 2019ம் ஆண்டு நிர்மலா சீதாராமன் அறிமுகம் செய்துவைத்தார்.
11) சுதந்திர இந்தியாவில் அதிகநேரம் பட்ஜெட் உரையை ஆற்றியதில் நிர்மலா சீதாராமன் (162 நிமிடங்கள்) முன்னிலையில் இருக்கிறார்கள். முன்னதாக 2003ல் ஜஷ்வந்த் சிங் 133 நிமிடங்கள், 2012ல் பிரணாப் முகர்ஜி 106 நிமிடங்கள், 2013ல் ப.சிதம்பரம் 103 நிமிடங்கள் வாசித்துள்ளனர்.
அருண் ஜேட்லி நிதியமைச்சராக இருந்த போது 2014ல் 130 நிமிடங்கள், 2017ல் 110 நிமிடங்கள், 2018ல் 109 வாசித்திருந்தார். நிர்மலா சீதாராமன் 2019ல் 137 நிமிடங்கள், 2020ல் 162, 2021ல் 137, 2022ல் 92 நிமிடங்கள் என தனது பட்ஜெட் உரையை நிகழ்த்தியிருக்கிறார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?