India
கல்யாணத்தை நிறுத்த இப்படி ஒரு காரணமா? மணமகளின் முடிவால் அதிர்ச்சியில் திருமண வீட்டார்; உ.பியில் பரபரப்பு!
மணமகனின் செயலால் அதிருப்திக்கும் கோபத்துக்கும் ஆளான மணப்பெண் திருமணத்தையே நிறுத்தியுள்ளார். இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் உள்ள ஆவ்ரையா மாவட்டத்தில் நடந்திருக்கிறது.
பிதுனா கொட்வாலியில் உள்ள நவீன் பஸ்தி பகுதியில் திருமண நிகழ்வு நடந்திருக்கிறது. அப்போது வரமாலை என்ற சடங்கின் போது மணப்பெண்ணுக்கு மாலை போடும் நிகழ்வின் போது மாப்பிள்ளை மாலையை பெண்ணின் கழுத்தின் மீது போடாமல் அதனை தூக்கி எறிந்திருக்கிறாராம்.
இதனால் கடுப்பான மணமகள் மணமகனை திருமணம் செய்துக்கொள்ள பிடிக்கவில்லை எனக் கூறியிருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த இரு வீட்டாரும் முதலில் பெண்ணை சமாதானம் செய்திருக்கிறார்கள். மணமகனும் தான் அவ்வாறு மாலையை வீச எறியவில்லை எனக் கூறியிருக்கிறார்.
இருப்பினும் தனது முடிவில் பெண் உறுதியாக இருந்திருக்கிறார். இதன் காரணமாக இரு வீட்டாரிடையே வாக்குவாதம் நீடித்திருக்கிறது. இதனையடுத்து போலிஸை வரவைத்து இந்த விவகாரத்துக்கு முடிவுக்கட்ட முற்பட்டிருக்கிறார்கள்.
இதனையடுத்து இரு வீட்டாரும் தத்தம் கொடுத்த பொருட்களை திரும்பி பெற்றுக்கொண்டு திருமணத்தை நிறுத்தி கலைந்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் திருமணத்துக்கு வந்த உறவினர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!