India
பெகாசஸ் ஊடுருவல் உண்மைதான்.. ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சைபர் குழு: சிக்கிய ஒன்றிய அரசு?
பெகாசஸ் உளவு மென்பொருளை இஸ்ரேல் நிறுவனத்திடம் இருந்து இந்திய அரசு வாங்கியது என நியூயார்க் டைம்ஸ் கட்டுரை வெளியிட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் மீண்டும் பெகாசஸ் சர்ச்சை வெடித்துள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்புத் துறையின் ஒரு பிரிவான என்எஸ்ஓ (NSO) நிறுவனத்தின் தயாரிப்புதான் பெகாசஸ் உளவு மென்பொருள். இந்நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரின் செல்போன் தகவல்கள் திருடியதாக அமெரிக்க ஊடகங்கள் குற்றம்சாட்டின.
இந்தியாவிலும் பத்திரிகையாளர்கள், ஒன்றிய அமைச்சர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் செல்போன்கள் இந்த மென்பொருள் மூலம் கண்காணிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்துக் கடந்த முறை நடைபெற நாடாளுமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கடுமையாகக் கேள்விகளை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து பெகாசஸ் விவகாரம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 2 பில்லியன் டாலர் அளவிலான இந்தியா- இஸ்ரேல் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பெகாசஸ் உளவு மென்பொருளை இந்திய அரசு கடந்த 2017-ம் ஆண்டு வாங்கியதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை கட்டுரை வெளியிட்டுள்ளதால் இந்த பிரச்சனை மீண்டும் பூதாகரமாகியுள்ளது.
இது குறித்து இன்று துவங்க உள்ள நாடாளுமன்ற கூட்டத்தில் கேள்வி எழுப்ப காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்நிலையில் பெகாசஸ் உளவு மென்பொருளைக் கொண்டு தொலைப்பேசிகள் கண்காணிக்கப்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பெகாசஸ் பென்மொருள் ஊடுருவல் விவகாரம் குறித்து சைபர் கிரைம் நிபுணர்கள் ஆய்வு செய்துள்ளனர். இதில் 2018, 2021ம் ஆண்டில் தொலைப்பேசிகள் கண்காணிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வு முடிவுகளை சைபர் கிரைம் நிபுணர்கள் உச்சநீதிமன்றம் அமைத்துள்ள விசாரணைக்குழுவிடம் அறிக்கை தாக்கல் செய்தனர். மேலும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையில் அமைக்கப்பட்டு குழுவின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டவுடன் இது குறித்தும் விசாரணை நடத்தப்படும்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!