India

காந்தியின் விருப்ப பாடல் நீக்கம்.. குடியரசு தின விழாவை சிதைக்கும் ஒன்றிய அரசு!

குடியரசு தின விழா முடிந்ததும் ஜனவரி 29ம் தேதி படைகள் பாசறைக்குத் திரும்பும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்நிகழ்ச்சியில் 44 பீகில் வாசிப்பாளர்கள், 16 ட்ரம்பட் இசைக் கலைஞர்கள்,75 ட்ரம்மர்கள் மற்றும் 6 பேண்டு வாத்தியக் கலைஞர்கள் பாடல்களை இசைப்பார்கள்.

இதில், மகாத்மா காந்திக்கு விருப்பமான ’Abide with me’ என்ற பாடல் 1950ம் ஆண்டிலிருந்து இசைக்கப்படு வருகிறது. இந்த முறை நடைபெற உள்ள குடியரசு தின விழா இறுதி நிகழவில் இப்பாடல் நீக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கடந்த 2020ம் ஆண்டு இந்த பாடல் நீக்கப்பட்டபோது கடும் எதிர்ப்புகள் எழுந்ததை அடுத்த 2021ம் ஆண்டு மீண்டும் Abide with me பாடல் இடம் பெற்றது. தற்போது மீண்டும் இந்தப்பாடலை ஒன்றிய அரசு நீக்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஹென்ரி பிரான்சிஸ் லைட் என்பவர் 1847ல் Abide with me பாடலை இயற்றினார். காசநோயால் பாதிக்கப்பட்டிருந்த அந்த நபர் உயிர் பிரியும் வேதனையில் இருந்தபோது எழுதிய பாடல் இது. மகாத்மா காந்திக்கு இந்த கிறிஸ்துவப் பாடல் மிகவும் பிடித்த பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ”மாநில உரிமையை பறிக்க ஒன்றிய அரசின் மற்றுமொரு ஆபத்தான சதி” - திருமாவளவன் கடும் கண்டனம்!