India
ரத்தன் டாடாவே அழைத்து வேலை கொடுத்த இந்த இளைஞர் யார்? டாடா - சாந்தனு நட்புறவு சாத்தியமானது எப்படி?
இந்தியாவின் பிரபலமான மூத்த தொழிலதிபரான ரத்தன் டாடாவுடன் இருக்கும் இளைஞர் யாராக இருக்கும் என்ற கேள்வி சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர் மத்தியில் தொடர்ந்து எழுந்து வருகிறது.
ரத்தன் டாடாவின் உதவியாளராக இருக்கக் கூடிய இந்த சாந்தனு நாய்டு யார்? எப்படி டாடாவின் உற்ற உதவியாளராக மாறினார்? என்பதை இங்கே காணலாம்.
28 வயதே ஆன இந்த சாந்தனு நாயுடு டாடா குழுமத்தின் துணை பொது மேலாளராக உள்ளார். 2014ம் ஆண்டு புனே பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் பொறியியல் படிப்பை முடித்தவர் டாடா குழுமத்தின் வடிவமைப்பு பொறியாளராக பணியாற்றியிருக்கிறார்.
மற்ற ஊழியர்களை போன்றே சாந்தனுக்குவுக்கு அந்த நாள் சாதாரணமாகவே இருந்திருக்கிறது. பணி முடிந்து வீட்டுக் சென்றுக்கொண்டிருந்த சாந்தனு கண்ணுக்கு சாலை விபத்தில் நாய் ஒன்று இறந்து கிடந்தது தெரிந்திருக்கிறது.
அதனைக் கண்டு மனம் நொந்துபோன சாந்தனு இனி சாலை விபத்தில் நாய்கள் இறப்பதை தடுக்க வேண்டும் என்று எண்ணி நண்பர்கள் குழுவுடன் இணைந்து சாலையில் நாய்கள் இருப்பதை வாகன ஓட்டிகளுக்கு தெரியப்படுத்தும் வகையில் Reflector Collar ஒன்றினை அந்த நாய்களுக்கு அணிவித்து வந்துள்ளார்.
இதனையடுத்து சாந்தனு நாயுடுவின் காலர் கண்டுபிடிப்பால் சாலை விபத்தில் இருந்து நாய் ஒன்று உயிர் பிழைத்திருப்பதாக செய்தி அவரை சென்றடைந்திருக்கிறது. இதுபோக டாடா குழுமத்தின் செய்திக் குறிப்பிலும் சாந்தனுவின் பணியை பாராட்டியுள்ளனர்.
சாந்தனுவின் செயல் பொதுமக்கள் பலருக்கும் அறியவர அவர்கள் தங்களுக்கும் காலர் செய்து தரும்படி கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். ஆனால் சாந்தனுவால் அப்போது அவற்றுக்கு செலவிட போதுமான பணம் இல்லாமல் போயிருக்கிறது.
இருப்பினும் சாந்தனு தன் தந்தையின் ஆலோசனைப்படி ரத்தன் டாடாவுக்கே நாய்களுக்கான காலர் தயாரிப்பது குறித்து கடிதம் எழுதியிருக்கிறார். இரண்டு மாதங்கள் கழித்து ரத்தன் டாடா கையெழுத்திட்ட கடிதம் சாந்தனுவுக்கு வந்திருக்கிறது.
அதில், சாந்தனுவை சந்திக்க வேண்டும் என ரத்தன் டாடா எழுதியிருந்திருக்கிறார். மும்பையில் டாடாவை நேரில் சந்தித்திருக்கிறார் சாந்தனு. பின்னர் டாடா தான் வளர்க்கும் நாய்களை அறிமுகம் செய்திருக்கிறார். அங்கிருந்துதான் டாடாவுக்கும் சாந்தனுவுக்குமான நட்புறவு தொடங்கியிருக்கிறது. மேலும் டாடாவும் நாய்களுக்கான காலர் தயாரிக்க நிதியுதவி செய்திருக்கிறார்.
இதனையடுத்து கார்னெல் பல்கலைக்கழகத்தில் MBA படித்து முடித்த பிறகு 2018ல் இந்தியா வந்தவருக்கு டாடாவிடமிருந்து மீண்டும் கடிதம் வந்திருக்கிறது. அதில், தன்னுடைய அலுவலகத்தில் நிறைய வேலைகள் உள்ளது. என் உதவியாளராக பணியாற்றுகிறீர்களா என அழைத்துள்ளார்.
அன்று முதல் இதுகாறும் ரத்தன் டாடாவின் உற்ற உதவியாளராகவும் அவரது அலுவலகத்தின் துணை பொது மேலாளராகவும் பணியாற்றி வருகிறார். டாடாவை மற்ற பணியாளர்கள் பாஸ் என அழைத்தால் சாந்தனு மட்டும் Millennial Dumbledore என்றே அழைப்பாராம்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!