India
2 லட்சத்தை தாண்டிய கொரோனா தினசரி பாதிப்பு.. கட்டுப்பாடுகள் கடுமையாகுமா? முதல்வர்களுடன் மோடி இன்று ஆலோசனை!
இந்தியாவில் குறைந்திருந்த கொரோனா தொற்று தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் ஒரு லட்சத்திற்கு மேல் கொரோனா தொற்று பதிவாகி வந்த நிலையில் இன்று 2 லட்சத்திற்கு மேல் தொற்று பதிவாகியுள்ளது பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2,47,417 பேருக்குப் புதிதாக கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. 380 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தொற்றிலிருந்து ஒரே நாளில் 84,825 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருவதால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு ஊரடங்கு, வார விடுமுறையில் முழு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் குறித்து ஏற்கனவே ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர், மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் இன்று மாலை அவசர ஆலோசனை நடத்த உள்ளார். இதனால் இந்தியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் இன்னும் தீவிரமாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
TN Fact Check : தஞ்சை பெரிய கோயிலில் இந்தி கல்வெட்டா? - இணையத்தில் பரவும் போலி செய்தி : உண்மை என்ன?
-
200 ஏக்கர் பரப்பளவில் ஆன்மீக சுற்றுலா மையம்! : அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு!
-
நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு புகார் : சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜர்!
-
ரூ.1,792 கோடியில் ஸ்ரீபெரும்புதூரில் Foxconn நிறுவன ஆலை விரிவாக்கம்... 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு!
-
நீதிமன்றத்தில் காணொளி மூலம் வழக்கு விசாரணை! : டெல்லி காற்று மாசு எதிரொலி!