India
ஹேக் செய்யப்பட்ட ஒன்றிய அரசின் ட்விட்டர் கணக்கு.. Elon Musk பெயரில் ட்வீட் வெளியானதால் பரபரப்பு!
ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் @MIB_India என்ற பெயரில் ட்விட்டரில் செயல்பட்டு வருகிறது. இதில் ஒன்றிய அரசின் முக்கிய அறிவிப்புகள் தகவலாக ட்வீட் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்று ஒன்றிய தகவல் அமைச்சகத்தின் ட்விட்டர் பக்கம் திடீரென Elon Musk என்ற பெயரில் செயல்படத் துவங்கியது. மேலும் இதிலிருந்து அடுத்தடுத்து ட்வீட்டுகளும் பதிவாகியுள்ளன.
இதைப்பார்த்த ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். ட்விட்டர் பக்கம் ஹேக்செய்யப்பட்டதை அறிந்த உடனே சில நிமிடத்திலேயே ஹேக்கர்களிடமிருந்து மீட்டனர்.
மேலும், ஹேக் செய்யப்பட்டிருந்த ட்விட்டரில் Great Job என பதிவிடப்பட்டிருந்தது. பிரபல தொழிலதிபர் Elon Musk பெயரைப் பயன்படுத்தி ஒன்றிய அமைச்சகத்தின் ட்விட்டர் பக்கம் ஏன் ஹேக் செய்யப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. அப்போது ஹேக்கர்கள் கிரிப்டோ கரன்ஸி முதலீடு செய்யக் கோரி ட்வீட் செய்திருந்தனர்.
மீண்டும் ஒன்றிய அமைச்சகத்தின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒன்றிய அரசின் டிஜிட்டல் பாதுகாப்பு லட்சணம் இதுதானா என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Also Read
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!