India
இந்தியாவில் கொரோனா 3 வது அலை எப்போது குறையும்?.. IIT பேராசிரியர் கூறிய முக்கிய தகவல்!
இந்தியாவில் கடந்த ஏழுமாதங்களாக குறைந்து வந்த கொரோனா தொற்று கடந்த இரண்டு வாரங்களில் மின்னல் வேகத்தில் அதிகரித்துள்ளது. அதேபோல ஒமைக்ரான் தொற்றும் அதிகமாக பரவிவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,94,720 பேருக்குப் புதிதாகத் தொற்று பதிவாகியுள்ளது.
இதனால் தமிழ்நாடு, டெல்லி, மாகாஷ்டிரா, கர்நாடகாக உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மீண்டும் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கொரோனா பரவல் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 4 முதல் 8 லட்சம் வரை பதிவாகும் என்று மார்ச் வரை கொரோனா தொற்றின் பரவல் இருக்கக் கூடும் என ஐ.ஐ.டி பேராசிரியர் மனீந்திர அகர்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து மனீந்திர அகர்வால் கூறுகையில், "மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் அடுத்த 10 நாட்களில் கொரோனா தொற்று உச்சத்தை எட்டும். மூன்றாவது கொரோனா அலை மார்ச் மாதத்திற்குப் பிறகு நீடிக்கும் என்று கூறமுடியாது.
இந்த மாதம் இறுதியில் கொரோனா தொற்று உச்சத்தை எட்டும். அப்போது 4 முதல் 8 லட்சம் வரை கொரோனா தினசரி தொற்று பதிவாகும். கொரோனா தொற்று அதிகரித்தாலும் அது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள் மூலம் கொரோனா மூன்றாவது அலை தாமதமாகலாம். இந்தியாவில் ஜனவரி இறுதியில் கொரோனா உச்சம் அடைந்து, மார்ச் மாதத்தில் முழுவதும் குறைந்து காணப்படும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்