India
சேர்ந்து வாழாததற்கு இப்படியும் ஒரு காரணமா? 11 ஆண்டுகள் கழித்து மனைவி கூறிய காரணம்; ஆடிப்போன நீதிபதி!
விநோதமான காரணங்களை முன்வைத்து பல்வேறு விவாகரத்து வழக்குகள் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில் சத்திஸ்கர் மாநிலத்தில் நடந்த விவாகரத்து வழக்கின் விசாரணையின் போது பெண் ஒருவர் கூறிய காரணம் நீதிபதிகளையே அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
கடந்த 2010ம் ஆண்டு சத்திஸ்கரைச் சேர்ந்த சந்தோஷ் சிங் என்பவருக்கு திருமணம் நடைபெற்றிருக்கிறது. அவரும் அவரது மனைவியும் வெறும் 11 நாட்களே ஒன்றாக வாழ்ந்திருக்கிறார்கள். 11 நாட்களுக்கு பிறகு ஏதேவொரு வேலை சம்பந்தமாக மனைவியை அவரது தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
அதன் பிறகு அந்த பெண் கணவருடன் வாழாமல் தாய் வீட்டிலேயே தங்கியிருக்கிறார். இதனையடுத்து பலமுறை போய் அழைத்து வர முற்பட்டும் எந்த பலனும் அளிக்கவில்லை.
இப்படியாக 11 ஆண்டுகள் கடந்திருக்கிறது. விரக்தியடைந்த சந்தோஷ் சிங் கும்பலநல நீதிமன்றத்தின் மூலம் விவாகரத்துக்கு விண்ணப்பித்திருக்கிறார். அதற்கும் தனது அரசு பணிகளை காரணம் காட்டி அந்த பெண் ஆஜராகாமல் இருந்திருந்தார்.
இதனையடுத்து பிலாஸ்பூர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததை அடுத்து சந்தோஷ் சிங்கின் மனு மீது ஆஜரான அப்பெண்ணிடம் ஏன் கணவருடன் சேர்ந்த வாழவில்லை எனக் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
அதற்கு நல்ல நேரம் எதுவும் வாய்க்காத காரணத்தால் கணவருடன் செல்லவில்லை எனக் கூறியிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த நீதிபதி, மகிழ்வான குடும்பம் அமைய நல்ல நேரம் தேவையாக இருக்கும். ஆனால் இந்த வழக்கில் உறவை முறிப்பதற்கு நல்ல நேரத்தையே ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.
இதனையடுத்து அந்த தம்பதிக்கு விவாகரத்து வழங்கப்பட்டிருக்கிறது.
Also Read
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!