India

பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு.. பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் அராஜகம்!

உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் ஆளும் பா.ஜ.க மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.

இதனால் பல்வேறு அரசு நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காகப் பிரதமர் மோடி உத்தர பிரதேசம் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் சுல்தான்பூரில் பிரதமர் நரேந்திர மோடியின் பேரணி நடைபெற்றது.

அப்போது, ரீட்டா யாதவ் என்ற பெண் பிரதமருக்கு எதிராக முழக்கம் எழுப்பி கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது மர்ம நபர்கள் சிலர் அந்த பெண் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

பிறகு போலிஸார் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குண்டடிபட்டு பெண் காங்கிரஸ் கட்சி தலைவர் ஆவார். இதையடுத்து துப்பாக்கிச்சூடு நடத்திய மூன்று பேர் மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: "நான் தப்பு பண்ணிட்டேன்..” : பா.ஜ.கவில் சேர்ந்து 6 நாட்களிலேயே மீண்டும் காங்கிரஸுக்கு திரும்பிய MLA!