India
கர்நாடக போலிஸாருக்கு தொடர்ந்து டிமிக்கி கொடுத்த ’எஸ்கேப் கார்த்திக்’ 17வது முறையாக பிடிபட்டது எப்படி?
சுமார் 80 வழக்குகளில் தொடர்புடைய கார்த்திக் குமார் என்ற எஸ்கேப் கார்த்தி எப்படி பிடிபட்டார் என்பதை பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலிஸார் கூறியுள்ளார்.
அதில், பெங்களூருவின் கல்யாண் நகரைச் சேர்ந்த கார்த்திக் குமார் (32) என்பவர் தனது 16 வயதில் இருந்தே திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். 2005ம் ஆண்டு நகைத் திருட்டு வழக்கில் சிக்கிய கார்த்திக் குமார் இதுவரை பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டிருக்கிறார்.
கர்நாடகா மட்டுமல்லாமல் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா என தென்னிந்தியாவிலும் எஸ்கேப் கார்த்திக் மீது பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளன. 2005ல் முதல் திருட்டி ஈடுபட்ட கார்த்திக் குமார் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமினில் வெளிவந்து மீண்டும் திருட்டு தொழிலில் இறங்கினார்.
2008ம் ஆண்டு பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட இந்த கார்த்திக் உணவு கொண்டு வரும் வேனில் ஏறி தப்பித்துச் சென்றார். அதன் பின் 45 நாட்கள் தீவிர தேடுதலுக்கு பிறகு பிடிபட்டார்.
2010ல் குற்றம் நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்ற போது போலிஸின் பிடியில் இருந்து தப்பித்துச் சென்றார். பிரிதொரு நாளில் மீண்டும் பிடிபட்டார். இவ்வாறு அடிக்கடி போலிஸ் காவலில் இருந்து தப்பிப்பதை வழக்கமாக கொண்டதால் கார்த்திக் குமாரை எஸ்கேப் கார்த்திக் என்றே போலிஸார் அடையாளப்படுத்தினர்.
இந்த எஸ்கேப் கார்த்திக் சீரான உடல்வாகு உள்ளவராகவும் ஓடுவது, சுவர் ஏறுவது என பல திறன்கள் இருப்பதால் போலிஸிடம் சிக்கியதும் ஓட்டம்பிடித்து விடுகிறார். இப்படி இருக்கையில் கடந்த வெள்ளியன்று பெங்களூருவில் உள்ள ஒரு வீட்டில் கொள்ளையடிக்க முயற்சித்த போது கையும் களவுமாக எஸ்கேப் கார்த்திக் சிக்கியிருக்கிறார்.
இவ்வாறு 17வது முறையாக கார்த்திக் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரை மீண்டும் தப்பித்து விடாமல் பார்த்துக்கொள்ள இளமையான சீரான உடல்வாகு கொண்ட போலிஸார் குவிக்கப்பட்டுள்ளன. கைதான கார்த்திக்கிடம் இருந்து 11.43 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!