India
'Uncle’ என அழைத்ததற்காக இளம்பெண்ணை தாக்கிய கடைக்காரர்.. உத்தரகாண்டில் அதிர்ச்சி - நடந்தது என்ன?
உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தம் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள சித்தர்கஞ்ச் நகர் பகுதியில் விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்தக் கடையை மொஹித் குமார் (35) என்பவர் நடத்தி வருகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று இந்தக் கடைக்கு 18 வயது இளம்பெண் ஒருவர் வந்துள்ளார். அவர் கடைக்காரர் மொஹித் குமாரை ‘Uncle’ என அழைத்துள்ளார்.
இளம்பெண் தன்னை ‘Uncle' என அழைத்ததைக் கேட்டு ஆத்திரமடைந்த மொஹித் குமார் அந்த இளம்பெண்ணை பலமாகத் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அந்தப் பெண்ணுக்கு மருத்துவமனையில் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது குணமடைந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலிஸார் தானாக முன்வந்து, இளம்பெண்ணை தாக்கிய கடைக்காரர் மொஹித் குமார் மீது இந்திய தண்டனை சட்டம் 323, 354 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து சித்தர்கஞ்ச் பகுதி போலிஸார் கூறுகையில், “18 வயது இளம்பெண், மொஹித் குமாரின் கடையில் பேட்மிண்டன் ராக்கெட் வாங்கியுள்ளார். அதன் ஸ்ட்ரிங் சில விடுபட்டிருந்த காரணத்தால் அதை மாற்ற மீண்டும் கடைக்கு வந்துள்ளார்.
அப்போது அந்தப் பெண் ‘Uncle’ என அழைத்த காரணத்தால் மொஹித் குமார் ஆத்திரமடைந்து அப்பெண்ணைத் தாக்கியுள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!