India
“ரயில்வே போலிஸாரை பழிவாங்க ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்” : மர்ம நபரால் கதிகலங்கிய போலிஸ் - நடந்தது என்ன?
உத்தர பிரதே மாநிலம் ஆக்ராவில் உள்ள ரயில்வே பாதுகாப்புப் படைக்கு மர்ம நபர் ஒருவர் போன்செய்து கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ரயில்வே பாதுகாப்பு படையினர் உடனே கர்நாடகா ரயில்வே போலிஸாருக்கு இந்த தகவலை தெரிவித்தனர். பின்னர் போலிஸார் கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிரமாக சோதனை செய்தனர். மேலும் ரயில் நிலையங்களிலும் போலிஸார் சோதனை நடத்தினர்.
மாலை வரை சோதனை செய்தும், மர்ம நபர் கூறியது போல் வெகுண்டுகள் எதுவும் போலிஸாருக்கு கிடைக்கவில்லை. ஒருவேலை இது புரளியாக இருக்கும் என நினைத்து தொலைப்பேசியில் பேசிய மர்ம நபர் குறித்து போலிஸார் விசாரணை செய்தனர்.
அப்போது, ரயிலில் புகை பிடித்தற்காகப் பயணி ஒருவருக்கு போலிஸார் அபராதம் விதித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் பழிவாங்கும் நோக்கில் ரயில்வே போலிஸாருக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் அந்த நபரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!