India

“பெட்ரோல் விலை குறைப்புக்கு உ.பி தேர்தல்தான் காரணமா?” : மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி ஆவேசம்!

பெட்ரோல் மற்றும், டீசல், சமையல் எரிவாயு விலை ஏற்றம் குறித்து மக்களைவியில் தயாநிதி மாறன் எம்.பி மக்களைவையில் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தயாநிதி மாறன் எம்.பி பேசியது வருமாறு:-

இத்தனை ஆண்டுகளாக பெட்ரோல் விலை குறைப்பு குறித்து வலியுறுத்திய போது செவி சாய்க்காமல் இப்போது திடீரென்று 10 ரூபாய் குறைத்துள்ளீர்கள் (காரணம் உத்திர பிரதேச தேர்தல்?) ஏழைத் தாய்மார்களின் கண்ணீரை போக்க இலவச சமையல் எரிவாயு என பிரம்மாண்டமாக விளம்பரம் செய்தீர்கள், ஆனால் இன்று சமையல் எரிவாயுவின் விலை ஏற்றத்தால் தாய் மார்கள் மட்டுமல்ல குடும்பமே கண்ணீர் வடிக்கின்றனர்.

பெட்ரோல் டீசல் கலால் வரி குறித்த கேள்விக்கு அமைச்சர் பங்கஜ் சவுத்ரிபதில்அளித்த போது பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி விதிப்பால் ஒன்றிய அரசுக்கு கடந்த 2019 -2020ம் நிதியாண்டில் 1.78 லட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது எனவும், இந்த 2020 - 2021ம் நிதியாண்டில் 3.72 லட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் பெட்ரோல், டீசல் மீதான ஒன்றிய கலால் வரி வசூலில், மாநிலங்களுக்கு 2020 - 2021ம் நிதியாண்டில் வெறும் 19 ஆயிரத்து 972 கோடி ரூபாய் மட்டும் தான் வழங்கப்பட்டுள்ளது.

வங்கிகளில் மக்களின் பணமானது வங்கி திவால் சட்டத்தின் மூலம் செட்டில்மென்ட் என்ற பெயரில் பெருமளவு மோசடி செய்யப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுகிறது. எடுத்துக்காட்டாக jsw steel நிறுவனத்திற்கு கடன் பிரச்சனையில் 50 % சலுகைகளும், ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கும் அலோக் நிறுவனத்திற்கு 83% சலுகைகள் என பல நிறுவனங்களுக்கு வங்கிகள் இச்சட்டத்தின் மூலம் பெருமளவு சலுகைகள் வழங்குகின்றன. எப்படி வங்கிகள் 70 %, 80% சலுகைகள் வழங்குகின்றன என்பது ஆச்சரியமளிக்கிறது.

அப்படி திவால் நிலைக்கு அறிவிக்கப்பட்ட பல நிறுவனங்களை அதன் உரிமையாளரே வேறு பெயரில் மீண்டும் திரும்ப பெறு கின்றனர். இந்த வரிசையில் சிவா நிறுவனம் கிட்டத்தட்ட 95% சலுகைகள் பெறமுயன்றுள்ளது. இந்நிகழ்வில் தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயமே தலையிட்டு எப்படி இவ்வளவு சலுகைகள் வழங்க உள்ளீர்கள் எனவினவியுள்ளது. இச்சூழ் நிலையில் சிவா நிறுவனத்தை மீண்டும் அவரது தந்தையே ஏலத்தில் எடுக்க முயன்றார். இது குறித்து ஒன்றிய அமைச்சகம் விசாரணை மேற்கொள்ளுமா?

விவசாயிகள் மற்றும் மாணவர்கள் பெறும் கடன்களுக்கு 10 சதவீதம் கூட சலுகைகள் கிடைப்பதில்லை, மாறாக அவர்களின் புகைப்படங்களை பொதுவெளியில் ஒட்டச் செய்து அவர்கள் அவமா னப்படுத்தப் படுகிறார்கள். ஆனால் பெரும் நிறுவனங்களுக்கு மட்டும்வங்கிகள் சலுகைகளை வாரி வழங்குகின்றனர். மேலும் தனியார் நிறுவன மான வீடியோகான் நிறு வனத்திற்கு கிட்டதட்ட 64,838 கோடிகள் கடன்கள் உள்ளன, ஆனால் வேதாந்த நிறுவனம் அதை வெறும் 2962 கோடிகளுக்கு வாங்க முயல்கிறது, வங்கிகள் இத்தனைசதவீத சலுகைகளை வாரி வழங்கும் போது அந்தப் பணத்தை யார் வழங்குவது, வங்கிகளா? இல்லை இது அத்தனையும் மக்களின் பணம். இது மிகப் பெரிய மோசடிக்கு நிகராகும்.

மேலும் வங்கிகளின் இயக்குநர் வாரியத்தில் உள்ளவர்களும், அவர்களுக்கு சம்பந்தப்பட்டவர்களும் இந்நிறுவனங்களின் ஆலோசகர்களாக உள்ளனர். அதில் உள்ளவர்கள் சாதாரண ஆலோசர்கர்கள் இல்லை, ராஜகுருக்கள், அவர்கள் வங்கிகளை தங்கள் கட்டுப்பாட்டில்தான் வைத்துள்ளனரா என்ற சந்தேகம் மக்களிடம் எழுகிறது. ஆம் நான் குருமூர்த்தியைதான் குறிப்பிடுகிறேன். மக்கள் பணத்தை வங்கிகளில் மோசடி செய்வதை தடுக்கும் வகையில் இனியாவது நிதியமைச்சர் விழித்துக் கொண்டு ஏதேனும் நடவடிக்கை எடுப்பாரா?" இவ்வாறுஅவர் கேள்வி எழுப்பினார்

Also Read: “₹46,262 கோடி கடனை ஏற்றுக் கொண்ட மோடி அரசு.. ஏர் இந்தியாவை தக்க வைக்காதது ஏன்?”: தயாநிதி மாறன் MP கேள்வி!