India
தடுப்பூசி போட வந்தவர்களை திட்டிய கிராமத்தினர்; விசாரிக்காது ஆஷா பணியாளர்களை அழைத்துச் சென்ற புதுவை போலிஸ்
புதுச்சேரி ஏம்பலம் கரிகளாம்பாக்கத்தில் பெண் ஆஷா பணியாளர்கள், தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்ற வகையில் வீடு வீடாகச் சென்று வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கட்டாயமாக தடுப்பூசி செலுத்த வேண்டும் என ஆஷா பணியாளர்கள் கூறிய நிலையில், குறிப்பிட்ட வீட்டில் இருந்த நபர்கள் ஆஷா பணியாளர்களை தகாத வார்த்தைகள் கூறி தாக்க முயன்றுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர்களை விசாரிக்காமல், ஆஷா பணியாளர்களை கிராமப்புற போலிஸார் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியுள்ளனர். இதற்கு புதுச்சேரி மாநில ஒட்டுமொத்த ஆஷா பணியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் திரளான ஆஷா பணியாளர்கள் புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். துறையின் உத்தரவின் பேரில் தான் நாம் இந்த பணியில் ஈடுபட்டு உள்ளோம், ஆனால் பாதுகாப்பற்ற நிலைதான் ஏற்பட்டுள்ளது.
எனவே எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?